இமானைத் தொடர்ந்து கனகா பிரச்சனையை கையில் எடுத்த நடிகை .. நேரடியாக சந்தித்து சொன்ன பகீர் தகவல்
சென்னை: நடிகை குட்டி பத்மினி பல வருடங்களுக்கு பிறகு நடிகை கனகாவை சந்தித்து தான் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
உடல் எடை அதிகரித்திருக்கும் நடிகை கனகாவின் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதோடு கனகா பற்றி பல தகவல்களையும் குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.

கனகாவிற்கும் அவருடைய தந்தைக்கும் இருந்த சொத்து பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்று குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.
கனகா என்ற பெயரை சொன்னதுமே பலருக்கும் ஞாபகம் வருவது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் அவர் மட்டுமல்லாமல் நடிகை கனகாவின் கண்கள் கூட தனியாக நடித்திருக்கும். பல இடங்களில் அவருடைய கண்ணசைவு பல ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கும். அந்த அளவிற்கு கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அதிகமான ரசிகர்களை கனகா கவர்ந்திருந்தார்.
புகழின் உச்சத்தில் இருக்கும்போதே திடீரென்று நடிகை கனகா காணாமல் போய்விட்டார். அந்த நேரத்தில் நடிகை கனகாவின் அம்மா திடீர் மரணம் அடைந்திருந்தனர். அதே நேரத்தில் கனகாவிற்கு அவருடைய தந்தையின் மூலமாகவும் பல நெருக்கடிகள் வர தொடங்கி சொத்து விஷயத்தில் பலர் கனகாவை ஏமாற்றி இருந்ததாலும் கனகா வீட்டை விட்டு வெளியே வராமல் ஒரு பாழடைந்த வீட்டிலேயே வசிக்க தொடங்கி விட்டார்.
தன்னுடைய அடிப்படை செலவு தேவைகளுக்கு மட்டுமே கனகா வெளியே வருவதும் பிறகு வீட்டிற்குள் முடங்கி கிடப்பதுமாக ஆகிவிட்டார். நடிகர் நடிகைகளோடு எந்த தொடர்பும் இல்லாமல் வீட்டிற்குள் இருக்கும் கனகாவின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதற்காக ரசிகர்களும் ஆர்வத்தோடு இருந்தனர். இந்த நிலையில் தான் நடிகை குட்டி பத்மினி கனகாவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் தன்னுடைய நண்பர்களோடு பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அது குறித்து குட்டி பத்மினி தன்னுடைய youtube சேனலில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் கனகாவை பார்ப்பதற்காக சில மணி நேரமாக அவருடைய வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். அவருடைய வீடு வெளிப்பக்கமும் உள்பக்கமும் பூட்டி இருந்தது.
அதனால் கனகா இல்லையோ என்று எங்களுக்கு தோன்றியது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சரி நாம போகலாம் என்று கிளம்பும்போது அங்கு ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் இருந்து ஒரு பெண் இறங்கியதும் என்னுடைய உதவியாளர் அது கனகா மேடம் தான் என்று சொன்னார். நான் நம்பவில்லை. அந்த அளவிற்கு உடல் எடை கூடி கனகா மாறியிருந்தார்.
ஆனாலும் கனகா என்னை பார்த்ததும் ஓடி வந்து அக்கா எப்படி இருக்கீங்க? உங்களை எப்படி மறக்க முடியும் என்று சொல்லி நான் நடித்த பாடலை பாடி காட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. பிறகு இருவரும் பக்கத்தில் இருந்த காபி ஷாப்பிற்க்கு சென்று காபி குடித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கனகா என் அப்பா தொடர்புடைய எல்லா கேஸ்களும் ஓரளவு முடிந்து விட்டது.
இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன். மேலும் இந்த வாழ்க்கை எனக்கு யாரையும் நம்ப கூடாது என்று கற்றுக் கொடுத்திருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார். பிறகு நான் என்னுடைய youtube சேனலில் உள்ள ரசிகர்கள் உன்னை ரொம்பவே தேடுகிறார்கள் என்று சொன்னேன் அதற்கு உண்மையாகவா....? உண்மையாகவா..? என்று கனகா இரண்டு முறை கேட்டார்.
பிறகு ரொம்பவே சந்தோஷம் என்று சொல்லி இருந்தார். அப்போது நான் கனகாவிடம் நீ என்னுடைய youtube சேனலில் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அதற்கு கண்டிப்பாக நான் கொடுக்கிறேன் என்றும் கனகா கூறி இருக்கிறார் என்று அந்த வீடியோவில் குட்டி பத்மினி பேசி இருக்கிறார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி இமான் பற்றியும் அவருடைய முதல் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் பேசி இருந்தார். இந்த நிலையில் இமானை தொடர்ந்து கனகா பிரச்சனையை குட்டி பத்மினி கையில் எடுத்திருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications