ஒரு காலத்தில் திரிஷா, விஜய் மனதார நேசித்தாங்க! ஆனால் சந்திரசேகர்! நடிகை குட்டி பத்மினி போட்ட புது குண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் விஜய் பற்றிய பேச்சுக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. நடிகராக இருந்து முதலமைச்சர் ஆன பிறகும் அவருடைய குடும்ப விஷயத்தைச் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நேற்று தான் அவருடைய மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கி விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் விவாகரத்து வழக்கு சர்ச்சை பெரிதாக பேசப்பட்டது. அதிலும் அவருடைய மனைவி விஜய் ஒரு நடிகையுடன் பழகிக் கொண்டிருக்கிறார், அந்த நடிகை பழகுவது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகும் எங்களிடம் இனி அவருடன் பேசவில்லை என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளில் சந்தித்து போட்டோக்கள் எடுத்திருக்கிறார். அந்த நடிகை அதை சோசியல் மீடியாவில் வெளியிடுகிறார். அது எனக்கும் குடும்பத்திற்கும் வருத்தத்தை கொடுக்கிறது என்று அந்த விவாகரத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பல சர்ச்சைகளும் எழுந்தது. விவாகரத்து வழக்கு விஷயம் வெளியே தெரிந்த சில வாரங்களிலேயே விஜய் நடிகை திரிஷாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதனால் பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியது. விஜய் மற்றும் திரிஷா இருவரையும் இணைத்து அரசியல் சூழலிலும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அதற்கு விஜய் மற்றும் திரிஷா தரப்பில் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

Vijay Trisha Kutty Padmini

நடிகை குட்டி பத்மினி பேட்டி

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த விவாகரத்து வழக்கை தான் இனி நடத்த போவதில்லை என்று சங்கீதா வழக்கை வாபஸ் வாங்கி விட்டார். இப்படியான சூழ்நிலையில் நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பேசும் போது, உண்மையில் விஜய், திரிஷா இருவருக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு காலகட்டத்தில் அவங்க ரெண்டு பேருக்குமே நல்ல அன்பு இருந்தது. இப்போ இல்ல... ஆரம்ப காலகட்டத்தில் கில்லி சமயத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் இருவரும் மனதார நேசித்தாங்க. அதை சந்திரசேகர் சார் எதிர்த்தாரு.

திரிஷா பற்றிய சர்ச்சை

அதனால இவங்களுக்குள்ள கல்யாணம் நடக்கல. விஜய் சாருக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அவங்களுக்கு வாழ்க்கை வேற மாதிரி போயிடுச்சு. திரிஷா உடைய வாழ்க்கையும் வேற மாதிரி போயிடுச்சு. கல்யாண வாழ்க்கையில் விஜய் சாரும் சந்தோசமாகத்தான் இருந்தாரு. ஆனா விஜய் சார் அவருடைய மனைவியை பிரிவதற்கு திரிஷா காரணம் என்று சொன்னால் நான் ஒத்துக்க மாட்டேன்.

திரிஷா திரும்ப வந்தது இப்பதான். நடுவுல கொஞ்சம் நாட்களாக இருவரும் எந்த படத்திலும நடிக்கவில்லை. ஆனால் விஜய், சங்கீதா இருவரும் பிரிந்து 5, 6 வருடம் ஆகிவிட்டது. அப்போ எதற்காக திரிஷாவை போட்டு இவங்க பிரச்சனைக்குள் இழுத்து பேசுறாங்க? பொதுவாக ஒரு நடிகை என்றால் சில இப்படித்தான் யூடியூப்பில் இழுத்து பேசுகிறார்கள். ஆனால் நீங்க கரெக்டா அனலைஸ் பண்ணி பார்த்தா விஜய், சங்கீதா எப்போ பிரிஞ்சாங்க என்பது யாருக்குமே தெரியாது.

விஜய் திரிஷா நட்பு

எனக்கு தெரிஞ்சு பல வருடம் ஆகிவிட்டது. அதற்கு பிறகு தான் திரிஷா விஜய் கூட ஒரு படத்துல நடிச்சிருக்காங்க. ஆனா அவங்களுக்குள்ள பழைய அன்பு கண்டினியூ ஆகுதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு மேடையில் இரண்டு பேரும் சேர்ந்து போய்ட்டாங்க என்பதற்காக அசிங்கமா பேசுறது, எனக்கு கரெக்டா படல. ஏன்னா பழைய ஃப்ரெண்ட் அவங்க.. மீட் பண்றது தப்புன்னு எனக்கு தோணல.

நாளைக்கே நயன்தாராவும் பிரபுதேவாவும் ஒரு நிகழ்ச்சியில் சேர்ந்து போனாங்கன்னா அது தப்புன்னு ஆகிடுமா? நயன்தாராவுக்கு இப்போ கல்யாணம் முடிஞ்சு குழந்தைகளோட சந்தோஷமாக இருக்கிறாங்க. ஆனாலும் பழைய நண்பருடன் பேசவே கூடாது என்று ஏதாவது இருக்கிறதா என்ன? என அந்த பேட்டியில் நடிகை குட்டி பத்மினி பேசியிருக்கிறார்.

Vijay Trisha Kutty Padmini

ரசிகர்கள் கருத்து

குட்டி பத்மினி இப்படி பேசியதற்கு, பலர் கில்லி சமயத்தில் விஜய்க்கு கல்யாணம் முடிந்து விட்டதே... விஜய் மேரேஜ் 1999 இல் நடந்து முடிந்து விட்டது. கில்லி ரிலீஸ் ஆனது 2004 என்று பழைய டேட்டாக்களை சொல்கிறார்கள். காதலுக்கு மரியாதை படம் ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடுத்த பேட்டிகளில் விஜய் சங்கீதா பற்றி அவ்வளவு பேசி இருப்பார். அப்போது தானே அவர்களுக்குள் திருமணமும் நடந்தது, என்றெல்லாம் பழைய கதைகளை தோண்டி வருகிறார்கள். இதனால் குட்டி பத்மினி பேசிய இந்த விஷயம் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+