பிரபல நடிகர் ஜெய்சங்கர்.. மகன் நிறைவேற்றிய கனவு.. அன்பு மழையில் "குட்டி பத்மினி”.. மாறாத குணம்
சென்னை: மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் அப்பாவின் நினைவாக மருத்துவமனை ஒன்றை புதியதாக திறந்திருக்கிறார்.
அது குறித்து நடிகை குட்டி பத்மினி விஜய்சங்கருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அதோடு நேரில் சென்று விஜய் சங்கரை ஆசிர்வாதமும் வழங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் விஜய்சங்கர் யார் அவர்களுடைய அப்பாவுக்காக என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

பழம் பெரும் நடிகரான ஜெய்சங்கர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய திரைப்படங்களை தாண்டியும் ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய உதவும் குணத்தால் அதிகமாக பரீட்சையமானவர்தான். தான் வாழும் போதே பலருக்கும் உதவிகளை செய்து கொண்டிருந்தார். அதோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானே செலவு செய்து பல பிரபலங்கள் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை உதவ வைத்திருக்கிறார்.
அதுபோல நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் மருத்துவராகவும் இன்னொருவர் பிஸ்னஸ் மேன் ஆகவும் அதே சமயத்தில் நடிகராகவும் இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராஜசேகர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெய்சங்கரின் மூத்த மகனான விஜய் சங்கர் அப்பா ஆசை பட்ட படியே கண் மருத்துவராக ஆகி இருக்கிறார்.
அத்தோடு தன்னுடைய தந்தை சொன்னபடியே பல கஷ்டப்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாராம். குறிப்பாக தன்னுடைய தந்தை நினைவு நாளில் ஏழைகள், சினிமா துறையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என பலருக்கும் தொடர்ச்சியாக உதவி செய்து கொண்டிருக்கிறாராம். 25 வருட அனுபவத்தில் இதுவரைக்கும் இலவசமாக பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் ஆபரேஷன் செய்து முடித்திருக்கிறேன் என்று சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கர் பற்றி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் டாக்டர் விஜய் சங்கரின் புதிய கிளினிக் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பயணத்தில் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் பெரும் வெற்றியையும், செழிப்பையும் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தொடர்ச்சியாக நீங்களும் உங்கள் அப்பாவை போல பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று விஜய் சங்கருக்கு ஆசிர்வாதங்களை வழங்கி வருகின்றனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications