நடிகை ரம்பாவை ரயிலில் திடீரென்று தாக்கிய நடிகை லைலா... அதிர்ச்சி காரணத்தை லீக் செய்த பிரபலம்
சென்னை: சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்பாவை நடிகை லைலா டிரெயினில் போய் கொண்டு இருக்கும்போது அடித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது லைலா தான் எதற்காக அப்படி நடந்து கொண்டேன் என்பது பற்றி தெரியவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தாராம். ஆனால் அது பற்றி இப்போது பிரபலம் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு நடிகை ரம்பா மற்றும் லைலா ட்ரெயினுக்குள் சண்டையிட்ட காரணம் இதுதான் என்று சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் அதிகமாக சண்டை நடைபெறும் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே சில நடிகைகள் தான் ஒருவருக்கொருவர் ஈகோ வைத்து மனதிற்குள்ளேயே போட்டி பொறாமையோடு இருந்திருக்கிறார்கள். அது சில நேரங்களில் வெளிப்படையாக வெடிக்கவும் செய்திருக்கிறது
அந்த மாதிரி தான் நடிகை ரம்பா மற்றும் லைலாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அதாவது ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ரம்பா கொடிகெட்டி பறந்து கொண்டிருந்தார். தான் நடித்த பணத்தை எல்லாம் சினிமா எடுக்கலாம் என்று ரம்பா முடிவில் இறங்கி இருக்கிறார். அப்போ அந்த நேரத்தில் ரம்பாவிற்கு சில தயாரிப்பாளர்கள் கூட இந்த முடிவு வேண்டாம் இது சரியாக இருக்காது என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

ஆனால் நான் யார் சொல்லியும் கேட்க மாட்டேன் என்று ரம்பா த்ரீ ரோசஸ் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் ஜோதிகா, லைலா ஆகியோரும் நடித்திருந்தனர். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. படம் ரிலீஸ் ஆகி பெரியளவு வரவேற்பும் கிடைக்கவில்லை. இந்த இந்த படப்பிடிப்புக்கு நடிகைகள் மூவரும் ஒரு முறை ட்ரெயினில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது.
அதாவது தாங்கள் செல்ல வேண்டிய தூரம் ரொம்ப தூரம் என்பதால் நடிகை லைலாவும் ரம்பாவும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு கட்டத்தில் லைலா என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லையாம். திடீரென்று ரம்பாவை அடிக்க தொடங்கி விட்டாராம். அப்போது ரம்பா நிறுத்து நிறுத்து என்று கத்தியும் கேட்காமல் லைலா ரொம்பவே ரம்பாவை அடித்துவிட்டாராம்.
பிறகு இருவரையும் அங்கிருந்தவர்கள் விலக்கி சமரசம் செய்கிறார்கள். பிறகு லைலாவிடம் கேட்டபோது எனக்கு என்ன ஆச்சுனே தெரியல என்று அந்த நேரத்தில் சமாளித்து இருந்தாராம். இது பற்றி தற்போது செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். அதாவது கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாக இருந்த விஐபி படத்தில் முதலில் ரம்பா கேரக்டரில் நடிக்க இருந்தது லைலா தானாம்.

ஆனால் எதுவா இருந்தாலும் சரி தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று லைலா கூறி இருந்தாராம். ஆனால் இந்த விஷயத்தை ரம்பா தனக்கு சாதகமாக்கி அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டதாக சிலர் லைலாவிடம் போட்டுக் கொடுத்திருக்கின்றர். அதனால் தான் லைலா டிரெயினில் ரம்பாவிடம் அப்படி நடந்து கொண்டார் என்று இப்போது செய்யாறு பாலு பத்த வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications