Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டைக்கேறிய போதையில் நடிகை லட்சுமி மேனன் செய்த ரகளை? அத்தனை பேர் வேடிக்கை பார்க்க காரில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐடி ஊழியரை கடத்தி சென்று தாக்கியதாக எழுந்த புகாரில் கேரளாவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன், நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்படும் நிலையில், முன்ஜாமீன் கோரி அவரது தரப்பு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. இதில், நடிகை லட்சுமி மேனனை செப்டம்பர் 17ம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லட்சுமி மேனன் விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர், தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "கும்கி படத்தின்போது, ஸ்கூலில் படித்து கொண்டிருந்தார் லட்சுமி மேனன்.. படம் சூப்பர் ஹிட்டானது.. பிறகு படிக்க போறேன் என்று சிறிது இடைவெளி எடுத்தார்.. மீண்டும் சினிமாவில் வந்து நடித்தார். பல படங்கள் நன்றாக ஓடின..

Television Actress Lakshmi Menon Video

நேற்று திடீரென லட்சுமி மேனன் தலைமறைவு என்று செய்திகள் வெளியாகின.. இதுகுறித்து கேரளா மீடியாவில் விசாரிக்கும்போதுதான் பல தகவல்கள் கிடைத்தன.

ஐடி கம்பெனி ஊழியர்கள்

எர்ணாகுளத்தில் ஒரு மது பாருக்கு, லட்சுமி மேனனும், அவருடைய 2 ஆண் நண்பர்கள், ஒரு பெண் தோழி என அனைவரும் சென்றுள்ளனர்.. பாரில் ஏற்கனவே ஒரு குரூப் உள்ளே இருந்துள்ளது.. அவர்கள் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கக்கூடியவர்கள் என தெரிகிறது..

இந்த இரு குரூப்புக்குள்ளும் திடீரென பாரில் தகராறு வந்துள்ளது.. இதனால் இரு தரப்பினரையுமே பாரில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.. பிறகு பாருக்கு வெளியே, காரில் ஏறப்போகும்போதும் இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

பிறகு காருக்குள் ஒரு குரூப் ஏறி சென்றுவிட்ட நிலையில், பின்னாடியே துரத்தி சென்ற இன்னொரு குரூப் மீண்டும் மோதியிருக்கிறது.

Television Actress Lakshmi Menon Video

A3 நபர் லட்சுமிமேனன்

இந்நிலையில், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் 3 நபர்கள், நடிகை லட்சுமி மேனனும், அவருடன் வந்த 3 பேரும் தங்களை காரில் கடத்தி கொண்டு சென்று, காரிலேயே வைத்து கடுமையாக தாக்கியதாக புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் எப்ஐஆர் பதிவு செய்து A1, A2, A3 என்று வழக்கு பதிவு செய்தனர்.

இதில், A1, A2 இருவரையும் கைது செய்துவிட்டார்கள்.. இதில் A3 லட்சுமி மேனன் என்பதால், அவரை தேடி
பார்த்தபோது தலைமறைவாகியிருக்கிறார். ஒருவேளை லட்சுமி மேனன் முன்ஜாமீன் மனு கோரப்போகிறாரா தெரியவில்லை.. இந்த சம்பவத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து லட்சுமி மேனன் வாய் திறந்து சொன்னால்தான் தெரியும்.

தள்ளுமுள்ளு வீடியோ

ஆனால், இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகிவிட்டது.. காரில் ஐடியில் வேலை பார்க்கும் நபர் உட்கார்ந்திருக்கும்போது, லட்சுமி மேனன் அவரை அடிக்க பாய்க்கிறார்.. உடனிருப்பவர்கள் லட்சுமி மேனனை விலக்கி விடுகிறார்கள்.. இந்த தள்ளுமுள்ளு வீடியோ கேரளா சேனலில் வைரலாகியிருக்கிறது.

இது பாரில் நடந்த ஒரு போதை சண்டைதான்.. ஆனால், வழக்கு ஸ்டிராங்காக இருக்க வேண்டும் என்பதற்காக, கடத்தி கொண்டு போய் தாக்கியதாக புகார் தரப்பட்டுள்ளது. இதுவரை ஒரு தரப்பு விளக்கம் மட்டுமே வெளிவந்துள்ளது.. லட்சுமி மேனன்தரப்பினர் இனிமேல்தான் தங்களது விளக்கத்தை சொல்வார்கள் என தெரிகிறது.

இனி வாய்ப்புகள் குறைந்துவிடும்

மாலைநேரத்தில், ஒரு நடிகை, அதுவும் பொதுவெளியில், அத்தனை கேமிராக்கள் சுற்றியிருந்தும், காரில் இருப்பவரை தாக்க போகிறார் என்றால், சுயநினைவில் லட்சுமி மேனன் இல்லை என்றே தெரிகிறது. ஹோம்லியாக ரசிகர்கள் பார்த்த நடிகை, இன்று இவ்வளவு கொடூரமாக காருக்குள் இருப்பவரை வெளியே இழுத்து தாக்க முற்படுவதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது.

ஏற்கனவே லட்சுமி மேனனுக்கு படங்கள் இல்லை.. இப்படி சர்ச்சையில் விழுந்துவிடுவதால் இனி வாய்ப்புகளும் வருவது கடினம்.. கேரளா சினிமாவில் சர்ச்சைகள் அதிகமானால் ரெட் கார்டு தந்துவிடுவார்கள். எனினும், இந்த தாக்குதல் விவகாரத்தில் லட்சுமி மேனன் பேசினால்தான் உண்மை என்னவென்று தெரியவரும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+