ஒரு வருடமாக வேதனை..இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல..உருக்கமாக மனம் திறந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: ஒரு வருடமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தன்னுடைய மகள் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
மருத்துவர்கள் பெரிய அளவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் தன்னுடைய மகளின் உடல் நிலை தேறியது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அடுத்தவர்களின் குடும்ப பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய வாழ்க்கையில் தான் பெற்ற கஷ்டங்கள் குறித்து பேசி வீடியோ வைரலாகி வருகிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக அவரது அறிமுகம் மலையாளத்தில் இருந்தாலும் தமிழில் நாவல் ,பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து எல்லாம் அவன் செயல், பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகானல்ல, உட்பட 30 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .இயக்குனர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காகவே மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருந்தார்.
தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அவர் செய்த இந்த செயல் அந்த நேரத்தில் பலரால் பாராட்டப்பட்டது. அவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது. தன்னுள் இருக்கும் இயக்குனர் திறமைக்கும் வேலை கொடுக்கும் பொருட்டு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, வீட்டுஉரிமையாளர்,அம்மானி போன்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார்.
பல படங்கள் நடித்திருந்தாலும், சில படங்களை இயக்கியிருந்தாலும்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலத்தை பெற்றிருந்தார்.பிற குடும்பங்களின் பிரச்சனைகளை பொது வெளியில் பேசுவது குறித்து பல விமர்சனங்களை இவர் சந்தித்து வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மூலம் ஒரு குடும்ப பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை கூறிக்கொண்டு நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை குறித்து வரும் பல கலாய்ப்புகளையும் மீம்ஸ் கண்டெண்டுகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் சமூக பிரச்சினைகளுக்கு தேவையான போது தன் குரலை கொடுத்து வந்தார்.இந்த நிலையில் தான் சமீபத்தில் அவருடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கிறது. அதற்கு காரணம் கொரோனாவா அல்லது என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியவில்லை.
அந்த நேரத்தில் வயிற்றில் அதிகமான வலி வந்தது. வலியில் என் மகள் அதிகமாக துடித்திருக்கிறார். அப்போது மருத்துவமனையில் சென்று பார்த்தால் எல்லா டெஸ்டும் எடுத்துப் பார்த்தாலும் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார்கள்.பிறகு வயிற்றில் சிறு பிரச்சனை இருந்திருக்கிறது. அது இதயம் கணையம் பகுதிகளை பாதிக்கும் நேரத்தில் தான் இவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
பிறகு சின்னதா முதலில் ஒரு ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். இவர்களும் சரியாகிவிடும் என்று வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். பிறகு அதிகமாக தான் ஆகியிருக்கிறது .அதற்கு பிறகு மீண்டும் சில மாதங்கள் கழித்து செக் பண்ணி பார்க்கும்போது அந்த பிரச்சனை வயிற்றில் நிறைய இடங்களை பாதித்து இருக்கிறது என்று கூறி விட்டார்களாம்.
பிறகு இதை பெரிய அளவில் தான் ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் வயிற்றில் எங்கெல்லாம் அந்த பாதிப்பு இருக்கிறதோ அதை எல்லாம் வெட்டி எடுத்து விட வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்களாம். அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருமே பயந்து கொண்டு இருந்தாலும் நல்லதே நடக்கும் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்தார்களாம். குறிப்பிட்ட நாளில் இவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் மீண்டும் மருத்துவமனைக்கு குழந்தையை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் மகளுக்கு பல ஸ்கேன் எடுத்து பார்த்து பிறகு பாதிப்பின் அளவு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது குறைந்துவிட்டது. இது மெடிக்கல் மிராக்கல். இது உங்களுடைய வில் பவர் மற்றும் உணவு கட்டுப்பாட்டால் தான் நடந்திருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள். இப்போது அந்த பிரச்சனை முழுமையாக போய்விட்டது. என்னுடைய மகளும் ரெஸ்டில் இருக்கிறார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
அதோடு எல்லோருமே வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தது என்றால் நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்க கூடாது. எப்படியும் கடைசி நேரத்தில் கூட நாம் உறுதியாக இருந்தால் அது மாற்றம் அடைந்து விடும் என்று அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் வகையில் பேசி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications