படையப்பா படத்தில் நடித்த நடிகைக்கு 44 வயதில் திடீர் திருமணம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்
நடிகை லாவண்யாவிற்கு தற்போது திருமணம் நடைபெற்று இருக்கிறது.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் அருவி சீரியலில் நடித்துவரும் நடிகை லாவண்யா தேவி 44 வயதில் திருமணம் செய்து இருக்கிறார்.
நடிகை லாவண்யா தேவி 90ஸ் திரைப்படம் மற்றும் சீரியல்களில் அதிகமாக நடித்து வந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் நாசரின் மனைவியாக நடிகை லாவண்யா தேவி நடித்திருப்பார்.

திடீர் திருமணம்
நடிகை லாவண்யா தேவி 1997 ஆம் ஆண்டு வெளியான சூரியவம்சம் திரைப்படத்தின் சொப்னா என்ற கேரக்டரில் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி இப்ப வரைக்கும் பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 44 வயதாகும் நடிகை லாவண்யா திடீரென்று தற்போது திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். நடிகை லாவண்யாவோடு சீரியலில் ஒன்றாக நடிக்கும் நடிகர்கள் பலரும் அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். இத்தனை வருடங்களாக இவருக்கு திருமணமாகாமல் இருக்கிறதா என்று பலரும் வியப்பில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

நடித்த திரைப்படங்கள்
நடிகை லாவண்யா இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக படையப்பா, சுயம்வரம், சங்கமம், ஜோடி, கண்ணுபட போகுதய்யா, தெனாலி, வில்லன், சுந்தரா ட்ராவல்ஸ், சமஸ்தானம், மிலிட்டரி போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

பாசிட்டிவ் கேரக்டர்
நடிகை லாவண்யா நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அதிகமான பாசிடிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். அதனாலயே இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகையாக இருந்து வருகிறார். குறிப்பாக 1990 இல் வெளியான பல சீரியல்களில் இவர் தங்கச்சி கேரக்டரிலும், கதாநாயகிக்கு தோழியாகவும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் இவர் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

திருமண வாழ்த்துக்கள்
இந்த நிலையில் நடிகை லாவண்யா பிரசன்னா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது லாவண்யா பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் படையப்பா திரைப்படத்தில் நாசரின் மனைவியாக இவர் நடித்ததை மறக்க முடியாது என்றும் இவருடைய புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் இவர் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கிறார். தற்போது இவருடைய திருமணத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications