பாண்டியன் ஸ்டோரில் நடப்பது இதுதான்.. கோபத்தில் ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த முல்லை
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை முல்லை கேரக்டரில் நடிக்கும் நடிகை லாவண்யா வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பல நாட்களாக மறைத்து வைத்திருந்த உண்மை எல்லாம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிகமானோர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சீரியலில் பல நாட்களாக பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த அனைத்து உண்மைகளும் இப்போது உடைந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் முதல் பாகம் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்களும் பரவி வருகிறது.
தனத்திற்கு மார்பக புற்றுநோய் பிரச்சனை இருப்பதை சில மாதங்களாகவே தனம், மீனா, முல்லை, கதிர் என நான்கு பேரும் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த உண்மை ஐஸ்வர்யாவிற்கு இப்போது தான் பெரிய வந்திருக்கிறது. அதை ஐஸ்வர்யா தன்னுடைய youtube சேனலில் வீடியோவாக வெளியிட்டு பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அது இப்போது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐஸ்வர்யா வீடியோவில் எங்கள் வீட்டில் ஒரு மருமகளுக்கு கேன்சர் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஆனால் யாருக்கு என்று தெரியாமல் இருந்த குடும்பத்தினருக்கு இன்றைய எபிசொட்டில் தனத்திற்கு தான் என்ற உன்னை தெரிய வந்திருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். இந்த நிலையில் இந்த சீரியலில் முல்லையாக நடிக்கும் லாவண்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த எபிசோடு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூன்று குழந்தைகள் இருப்பது போன்று கதை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு பதிலாக பெட்டை தான் கையில் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்
அந்த பெட்டுக்குள் குட்டி ஃபேன் ஒன்றை வைத்து லாவண்யா சீரியஸான காட்சியில் நடித்துக் கொண்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் இதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே தொட்டிலில் யானை பொம்மையை போட்டு காட்டுறீங்க, இப்போ பெட்ல விசிறியை வைத்து உங்க விசிறிகளுக்கே காட்டுறீங்களா? இது நியாயமா? என்று கேள்வி கேட்டு ஆனாலும் உங்களை இதில் பாராட்டதான் வேண்டும். உண்மையில் கையில் கணமே இல்லாத பெட்டை வைத்துக் கொண்டு நிஜ குழந்தையை தூக்கி வருவது போலவே கைகளிலும் உடல் அசைவுகளிலும் பக்குவமாக நடிக்கிறீர்களே, நீங்க வேற லெவல் தான் என்று பாராட்டியும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications