இந்த சீரியலில் நடிக்க காரணம் இதுதான்..! இனி சீரியலின் கதை இப்படித்தான்.. புது முல்லை சொன்ன ட்விஸ்ட்
சென்னை: சீரியலில் தற்போது முல்லை கேரக்டரில் நடிகை லாவண்யா நடித்து வருகிறார்.
இந்த கேரக்டரில் தான் நடிப்பதற்கான காரணத்தை பற்றி முதல் முறையாக பேசி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி நடிகை லாவண்யா சில தகவல்களை கூறியிருக்கிறார்.

பிரிந்த குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தனை வருடங்களாகவும் இந்த சீரியலில் அண்ணன் தம்பி கதை ஒற்றுமையாக போய்க்கொண்டிருந்தது. சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் பெரிய அளவில் குடும்பம் பிரிபடாமல் இருந்த நிலையில் தற்போது ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
நல்லா இருந்த குடும்பம் பிரிந்தால் பங்காளிகளுக்கு தான் கொண்டாட்டம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது இந்த சீரியலின் குடும்பம் பிரிந்து போவதை ரசிகர்கள் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் இந்த சீரியலில் ஜீவா வீட்டை விட்டு கிளம்பி சென்றது குறித்தும், ஜீவா தன்னுடைய அண்ணன் தம்பிகளிடம் கேள்வி கேட்ட விதத்தைப் பற்றியும் அதிகமாக ரசிகர்கள் பாராட்டி தற்போது அதிகமான மீம்ஸுகளும் குவிந்து வருகிறது.

ஆரம்பத்தில் பயம் தானாம்
இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போதைய முல்லை கேரக்டராக நடிக்கும் நடிகை லாவண்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் பல தகவல்களை பேசி இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனக்கு முல்லை கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது ரொம்பவே யோசித்தாராம். ஏற்கனவே நடிகை லாவண்யா அறிமுகமானது சிப்பிக்குள் முத்து என்று சீரியலில் மூலமாகத்தான். இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களில் முடிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து நடிகை காவியா திடீரென்று தான் வெளியேறப் போவதாக தெரிவித்து இருந்தார். ஏற்கனவே முல்லை கேரக்டரில் இரண்டு நடிகைகள் மாறி இருந்த நிலையில் மூன்றாவதாக நாம் நடித்தால் எப்படி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று ஆரம்பத்தில் லாவண்யா பயந்தாராம்.

அது நியாயம் தான்
ஆனால் இப்போது எங்கே சென்றாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலை பற்றி தான் எல்லோரும் இவரிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களாம். இந்த சீரியலில் ஜீவா செய்ததும் சரிதான், அதே நேரத்தில் ஐஸ்வர்யா செய்ததும் சரிதான். இவர்கள் இருவருமே அவர்களுடைய பக்கத்தில் இருக்கும் நியாயங்களை தான் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் குறித்து அதிகமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருவது பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதுபோல இந்த பிரச்சனைக்கு காரணமே முல்லைத்தான் என்று பலரும் என்னை திட்டி வருகிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இந்த சீரியல் இனி என்ன மாதிரி போகப்போகிறது என்பது இயக்குனரின் கையில் தான் இருக்கிறது. கதை எப்படி மாறப்போகிறது என்பது உங்களைப் போல நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கடைசியில் கூறிவிட்டார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications