தில்லு முல்லு "மாதவி” ஞாபகம் இருக்கா? மகளுக்கு உலகின் மிகப்பெரிய 2 பல்கலைக்கழகங்களிலிருந்து அழைப்பு
சென்னை: ரஜினி கமல் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை மாதவி தன்னுடைய மகள் செய்த சாதனை குறித்து மகிழ்ச்சியாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்
நடிகை மாதவியின் மகள் வெளிநாட்டில் அதிகமான மதிப்பெண்கள் பெற்று பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்ததால் அவருக்கு உலகின் மிகப்பெரிய இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காணாமல் இருந்த மாதவி தன்னுடைய மகளைப் பற்றி பெருமையாக பேசி இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குதிந்து வருகிறது.
ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்த பல நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் காணாமல் போயிருக்கின்றனர். பலர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் சில வருடங்களுக்குப் பிறகு அம்மா அக்கா கேரக்டர்களில் நடித்து இருக்கின்றனர் அந்த வகையில் நடிகர் ரஜினி, கமல் திரைப்படங்களில் அதிகமாக நடித்து பிரபலம் அடைந்தவர் தான் மாதவி.

இவருடைய கெத்தான நடிப்பு இவருக்கு பல திரைப்படங்களில் கம்பீரமான கேரக்டரை பெற்றுக் கொடுத்தது. அதுவும் 70ஸ் காலகட்டத்தில் தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி அதற்குப் பிறகு ஹிந்தி, மலையாளம், தமிழ் என பழமொழிகளிலும் முன்னணி நடிகையாக மாதவி வலம் வந்திருந்தார்.
குறிப்பாக இவர் நடித்து பிரபலம் அடைந்த தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை மற்றும் எல்லாம் இன்பமயம், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் உள்ளிட்ட பல படங்கள் இவருக்கே பொருத்தமான கேரக்டராக அமைந்திருந்தது என்று சொல்லும் வகையில் பாராட்டுகளை பெற்று பிரபலம் அடைந்தார். அதற்குப் பிறகு 1996 இல் ரால்ப் சர்மா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து திரை உலகில் இருந்து விலகி நியூ ஜெர்சியில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.
மாதவிக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர் தனது மகள் பிரிசில்லா என்பவர் அதிக மதிப்பெண்கள் பெற்று தனது இளங்கலை கல்லூரி படிப்பை முடித்துள்ளார் என்றும் அதுமட்டுமல்லாமல் அவரது மதிப்பெண்களை பார்த்து இவருக்கு உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து மேல்படிப்பில் சேர்வதற்காக அழைப்பு வந்திருக்கிறது.
இது குறித்து இந்த மகிழ்ச்சியான செய்தியையும் தனது மகளின் படிப்பு குறித்தும் அவரது மதிப்பெண்கள் குறித்தும் ஒரு அம்மாவாக தான் பெருமைப்படுவதாக கூறி மாதவி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். நடிகைகள் என்றால் தங்களுடைய குழந்தைகளை அந்த பாதையிலேயே வளர்த்து விடாமல் அவர்களுக்கு திறமையை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று பலர் கூறி வருகிறார்கள்
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications