அந்தமான் கடற்கரையில் பிளாஸ்ட் கச்சேரி போட்ட அய்யனார் துணை டீம்.. எங்கம்மா சோழன்? குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: கன்னடத் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, தமிழில் 'எதிர்நீச்சல்' சீரியலில் 'ஜனனி சக்திவேல்' கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் நடிகை மதுமிதா. சினிமா நட்சத்திரங்களைப் போல் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் இவர். சமீபத்தில் இவர் தற்போது நடித்து வரும் 'அய்யனார் துணை' சீரியல் குழுவினருடன் அந்தமானுக்குப் பயணம் செய்துள்ள வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களால் பரவி வருகின்றன.

நடிகர் விஜய்யின் பாட்டுக்கு டான்ஸ்
மதுமிதா தனது 'அய்யனார் துணை' குழுவினருடன் அந்தமானில் இருக்கும் ஹேவ்லாக் தீவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள அழகிய கடற்கரையில் அவர்கள் போட்ட ஆட்டம் ஒரு சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. மதுமிதா பகிர்ந்த வீடியோவில், நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகம்' திரைப்படத்திலிருந்து வெளியான கச்சேரி என்ற பாடல் ஒலிக்க, அய்யனார் துணை குழுவினர் அனைவரும் சேர்ந்து அந்தமான் கடற்கரை ஓரத்தில் நின்று உற்சாகமாக நடனம் ஆடியுள்ளனர்.
ரசிகர்களின் கேள்வி
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரிடம், "எங்கம்மா சோழன்" என்று அன்புடன் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு இந்த சீரியலில் நடிக்கும் எல்லாருமே இருக்கிறாங்க, சோழன் மட்டும் வரல என்பதால் இவர்களோடு சோழனுக்கு மட்டும் எதுவும் சண்டையா? அதனால்தான் அவர் வரலையா? என்றும் சிலர் கொளுத்தி போடுகின்றனர்.
நடிகை மதுமிதா கன்னடத் தொலைக்காட்சியில் 2017-ல் 'சனி' என்ற சீரியலில் நடித்து அறிமுகமாகி, கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்திருந்தாலும், சன் டிவியின் 'எதிர்நீச்சல்' தான் அவருக்குத் தமிழில் பெரிய அடையாளம் கொடுத்தது.
அவரது 'ஜனனி சக்திவேல்' கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு முடிந்த 'எதிர்நீச்சல்' சீரியலின் அடுத்தப் பாகத்தில் அவர் நடிக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தைக் கொடுத்தது. மதுமிதா ஒரு பயண பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்கு நல்லாவேதெரியும். 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதும் அந்தச் சீரியலின் நடிகர்கள், நடிகைகளுடன் அடிக்கடி சுற்றுலா சென்று அவர் எடுத்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாகும்.
தொடரும் சந்தோஷம்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' சீரியலில் 'நிலா' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தச் சீரியலும் மக்கள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றுள்ள நிலையில், அவர் தற்போது அய்யனார் துணை குழுவுடன் சேர்ந்து இதே போல மகிழ்ச்சியாகப் பயணம் செய்து மகிழ்ந்து வருகிறார்.
சினிமா போலவே தொலைக்காட்சித் தொடர்களிலும் அவருக்குக் கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இந்தக் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து வெற்றி சீரியல்களில் இவருக்குக் கிடைத்துள்ள நல்ல நண்பர்கள் அவரது சந்தோஷத்தை மேலும் அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications