எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகிய உண்மை காரணம் இதுதான்.. நடிகை மதுமிதா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்து சில மாதங்கள் கழித்து 2வது பாகம் தொடங்கியது. ஆனால் முதல் பாகத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த நடிகை மதுமிதா 2வது பாகத்தில் நடிக்கவில்லை. அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான அய்யனார் துணை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் எதற்காக எதிர்நீச்சல் சீரியலில் இந்த இருந்து விலகினேன் 2வது பாகத்தில் நடிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

மதுமிதா தமிழில் எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான் அறிமுகமானார். முதல் சீரியலே அவருக்கு பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் கொடுத்து விட்டது. பலரும் அவரை ஜனனியாகவே ஏற்றுக்கொண்டனர். எதிர்நீச்சல் சீரியலில் நடித்த எல்லா நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்கள். ஆண்கள்கூட இந்த சீரியல் பார்த்து வந்தார்கள். அதற்கு காரணம் இந்த சீரியலின் கதை தான். பெண்கள் முன்னேற்றத்தை மையமாக வைத்து வில்லன் காமெடியாகவும், அதே நேரத்தில் சில இடங்களில் மிரட்டல் ஆகவும் இருந்ததால் இந்த சீரியல் பெரிதாக பேசப்பட்டது.

Madhumitha

எதிர்நீச்சல் 2 சீரியலின் நிலை

ஆனால் திடீரென அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து காலமானது ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அதற்கு பிறகு கதையில் ஏற்பட்ட மாற்றம் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை. அதனாலயே டிஆர்பி குறைய தொடங்கிவிட்டது. அந்த நிலையில் தான் திடீரென அந்த சீரியலில் முதல் பாகத்தை இயக்குனர் திருச்செல்வம் முடித்து விட்டார். அதற்கு பிறகு 2வது பாகத்திற்கு வாய்ப்பு இல்லை என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிறகு சில மாதங்கள் கழித்து 2வது பாகமும் தொடங்கிவிட்டார். இப்போது அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் அதில் இருக்கும் கதை சில நேரங்களில் ரசிகர்கள் விரும்பியது போல போகிறது, சில நேரங்களில் வந்த கதை தான் ரிப்பீட்டு மோடில் வருகிறது. குணசேகரனிடம் வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு முறையும் விதவிதமாக தோற்றுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். அதனாலேயே ரசிகர்களுக்கு சலிப்பு தட்டுகிறது.

Madhumitha

சீரியல் நடிகை மதுமிதா விளக்கம்

இப்படி இருக்கும்போது இந்த சீரியலில் முதல் பாகத்தில் ஜனனியாக நடித்த மதுமிதா இப்போது ஒரு பேட்டியில் பேசும்போது, நான் இரண்டாவது பாகத்தில் ஏன் நடிக்கவில்லை என்று எல்லோரும் கேட்கிறார்கள் அதற்கு முக்கியமான காரணம் முதலில் முதல் பாகத்தோடு கதை முடிந்தது யாரும் இரண்டாவது பாகம் வரும் என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்று இயக்குனர் சொல்லிவிட்டார். அந்த சமயத்தில்தான் எனக்கு அய்யனார் துணை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கூட நம்மை இத்தனை நாட்களாக ஜனனியாக பார்த்தவர்கள் இனி நிலாவாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம் இருந்தது. ஆனால் மக்கள் எனக்கு இப்போதும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

நான் 2வது பாகத்தில் நடிக்காத காரணம் அந்த சீரியல் வரும் என்று தெரியாததால் நான் வேறு ஒரு சீரியலில் கமிட் ஆனது தான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட மதுமிதா ஒரு திரைப்படத்தில் நடிக்கும் நிலையில் அதற்கான ப்ரொமோஷனுக்காக தனக்கு விரைவில் திருமணம் என்பது போல ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அது பெரிதாக பேசப்பட்டது. ஆனால் அது கூட படத்துக்கான பிரமோஷன் என்பது கடைசியில் தான் தெரிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+