இரவோடு இரவாக மகளிர் உரிமைத் தொகை 3 ஆயிரம் கொடுத்தார்.. நீங்க நல்லா இருங்க.. ஆர்எஸ் பாரதி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தேர்தலுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கொடுக்கக் கூடாது என்பதற்காக பாஜக சார்பில் சுப்ரீம் கோர்டில் வழக்கு போட்டாங்க.. இதை தெரிந்துகொண்ட மு.க ஸ்டாலின் உடனடியாக கோட்டைக்கு சென்று அன்று இரவே, இரவோடு இரவாக 1.31 கோடி மக்களுக்கும் மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை விடுவித்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட நீங்க விசிலுக்கு ஊதிட்டிங்க.. நல்லா இருங்க.." என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆதங்கத்துடன் கூறினார்.

மேலும், நாங்க ஆட்சிக்கு வந்தால் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுப்போம் என்று சொன்னோம்.. அதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இன்றைக்கு எவனோ ஒருவனை கொண்டு வந்து ஆட்சியில் உட்கார வைத்ததன் விளைவு ஒரு மூட்டை அரிசியின் விலை 600 ரூபாய் கூடிடுச்சு என விலைவாசி உயர்வு குறித்தும் பேசினார்.

RS Bharathi

கொஞ்சம் ஏமாந்துட்டோம்

திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது:- நாம எல்லாம் கொஞ்சம் ஏமாந்துட்டோம். காரணம் என்ன என்றால் நாம் சிலவற்றை சொல்ல மறந்துட்டோம். ஆட்சில இருந்தா போதும். ஆட்சியில் இருந்து சாதனை செய்து மக்களுக்காக கொடுத்தோம். யாராவது தேர்தலுக்கு முன்னாடி 8 ஆயிரம் ரூபாய் கொடுக்க சொன்னாங்களா.. 3 ஆயிரம் ரூபாய் இரவோடு இரவாக ஏன் கொடுத்தார் என்ற வரலாறு ஓட்டு போட்ட பெண்களுக்கு தெரியுமா..

சுப்ரீம் கோர்டில் பாஜகவை சேர்ந்த ஒருவர் வழக்கு போட்டுவிட்டார். தமிழகத்தில் மு.க ஸ்டாலின் பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.1,000 கொடுக்கிறார். இதனை தேர்தல் நேரத்தில் கொடுக்கக் கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். வியாழக்கிழமை அந்த வழக்கு பதிவாகி, திங்கட்கிழமை விசாரணைக்கு வரப் போகிறது. இதை பார்த்த உடன் உடனடியாக தளபதி மு.க ஸ்டாலின் நேரடியாக கோட்டைக்கு சென்றார்.

இரவோடு இரவாக பணம் போட்டார்

இரவோடு இரவாக உட்கார்ந்து, திங்கட்கிழமை ஸ்டே கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள். சனிக்கிழமை பாதி நாள் தான் வங்கி வேலை நாட்கள்.. ஆகவே இன்று இரவே 1.31 கோடி மக்களுக்கும் 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பணத்தை போட்டு விட வேண்டும் என்று ஒரே நைட்டில் செக் போட்டு கொடுத்தார்.

செக்கை வாங்கி நீங்க எல்லாரும் விசிலுக்கு ஊதிட்டிங்க.. நல்லா இருங்க.. நல்லா இருங்க.. அத பத்தி கவலையே இல்லை. இதே போன்று கூடுதலாக ஒரு 5 ஆயிரம் கொடுத்தாங்க.. அது மட்டுமில்லை, தேர்தல் நேரத்திலே நாங்க ஆட்சிக்கு வந்தால் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுப்போம் என்று சொன்னோம்.. ஆனால் அதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இன்றைக்கு எவனோ ஒருவனை கொண்டு வந்து ஆட்சியில் உட்கார வைத்ததன் விளைவு 600 ரூபாய் ஒரு மூட்டைக்கு அரிசி விலை உயர்ந்துடுச்சு..

2 ஆயிரம் ரூபாய் கூடிட்டு

40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை 74 ரூபாய் ஆகிப்போச்சு.. இன்னைக்கு வரும் போது நான் படித்தேன், நடுத்தர குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் கூடுதலாக வரும். மின் கட்டணம் இல்லாமல், சாப்பிடுகிற பொருளில் மட்டும் விலைவாசி ரூ.2 ஆயிரம் கூடியிருக்கு. இதே சேலத்தில் 2 ஆயிரம் ரூபாய் இபிக்கு கட்டணம் கட்டியவர்கள், இன்று ரூ.20 ஆயிரம் கட்ட வேண்டும் என்பதற்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இது தான் இவர்களது ஆட்சி. இது தான் மாற்றம்.. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+