தோளோடு தோள் அணைத்த பாசம்! 300 கோடி மெத் வழக்கில் கைதான பூபாலனுடன் நெருக்கமாக விஜய்! பெரிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகப்பட்டினத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினரால் (DRI) பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் வழக்கு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சர்வதேச சந்தையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய இந்த சிந்தடிக் போதைக் கடத்தல் வழக்கில், தவெகவின் நாகை மாவட்ட நிர்வாகியும் வழக்கறிஞருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

"அவர் கீழ்மட்ட நிர்வாகி, கட்சியின் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டோம்" என்று கூறி வழக்கை மூடி மறைக்க தவெக தலைமை தீவிரமாக முயன்றது. ஆனால், அந்த தற்காப்பு வாதத்தின் அஸ்திவாரத்தையே சுக்குநூறாக உடைக்கும் வகையில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

Boopalan

நெருக்கத்தை அப்பட்டமாகப் படம் பிடித்த புகைப்படம்

வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஆசாமி பூபாலனை, தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் நெருக்கமாகத் தன் தோளோடு அணைத்துக் கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இது ஏதோ கூட்ட நெரிசலில் எதேச்சையாக எடுக்கப்பட்ட புகைப்படமல்ல; கட்சித் தலைமையின் தனிப்பட்ட அறையில், மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பில் எடுக்கப்பட்ட படம்.

விஜயுடன் மிக நெருக்கமாகப் பழகிய ஒருவர்தான் பூபாலன் என்பதை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக உறுதிப்படுத்துகிறது. நேற்றுவரை "அவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது, சாதாரண தொண்டர்" என்று தவெக தரப்பில் பரப்பப்பட்ட பொய்கள் அனைத்தும் இந்த ஒற்றைப் புகைப்படத்தால் தகர்ந்து போயுள்ளன.

ஜாபர் சாதிக் விவகாரத்தில் பேசியது நினைவிருக்கிறதா?

திமுக ஆட்சிக் காலத்தில் ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியபோது, தவெகவினர் என்ன பேசினார்கள்? "திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் புகைப்படம் எடுத்துக்கொண்டார்; எனவே ஒட்டுமொத்த திமுக தலைமையும் இந்த போதை மாஃபியாவின் பின்னணியில் இருக்கிறது" என்று மேடைதோறும் முழங்கினார்கள். முதலமைச்சர் குடும்பத்தையே நேரடியாகக் கைகாட்டி அவதூறு பரப்பினார்கள்.

இப்போது அதே அளவுகோலை மக்கள் தவெகவை நோக்கிக் கேட்கிறார்கள்:

பூபாலனை கட்டிப்பிடித்துத் தோளோடு அணைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு இந்த 300 கோடி ரூபாய் சர்வதேச போதைக் கும்பலின் தொடர்பு தெரியாதா? திமுக மீது பாய்ந்த அதே தார்மீகக் குற்றச்சாட்டு இன்று உங்கள் சொந்தக் கட்சித் தலைவரின் மீது திரும்பும்போது மட்டும் அது "தவறான குற்றச்சாட்டு" ஆகிவிடுமா? நேபாளத்தில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி, தமிழகத்திலேயே மெத் தயாரித்து, கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தும் அளவுக்குப் பிரம்மாண்டமான நெட்வொர்க் ஆளுங்கட்சியின் மிக நெருக்கமான வட்டாரத்தின் துணையின்றி நடப்பது சாத்தியமா?

சரத்குமார் வீடியோ முதல் பூபாலன் கைது வரை

ஏற்கனவே கிரிக்கெட் மைதானத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் மர்மமான முறையில் வெள்ளை நிறப் பொடியைப் பயன்படுத்திய வீடியோ வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "அது குழந்தையின் சளி மாத்திரை" என்று மழுப்பலான விளக்கங்கள் கூறப்பட்டாலும், மக்கள் மனதில் எழுந்த சந்தேகம் இன்னும் தீரவில்லை.

இப்போது, கடலோரப் பகுதியில் 137 கிலோ விஷ போதைப்பொருள் பறிமுதல், அதை இயக்கியது தலைமைக்கு மிகவும் நெருக்கமான பூபாலன், அவர் விஜயுடன் அத்தனை நெருக்கமாக இருக்கும் புகைப்படம் என அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள், "தவெக அரசு போதைக் கடத்தல்காரர்களின் பாதுகாப்புக் கூடாரமாக மாறிவிட்டதா?" என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்துள்ளன.

நீக்கம் என்ற கண்துடைப்பு... விஜயின் அதிர வைக்கும் மவுனம்!

பிரச்சினை பெரிதானதும் அவசர அவசரமாக ஒரு தாளிலே அறிக்கை வெளியிட்டு "கட்சியை விட்டு நீக்கிவிட்டோம்" என்று கூறிவிட்டால் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்களா?

தான் அணைத்துப் படம் எடுத்த ஒரு நபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, மாநிலத்தின் முதல்வராக இருக்கும் விஜய் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? மக்களிடம் வந்து "இது என் கவனத்துக்கு வராமல் நடந்தது, கடும் நடவடிக்கை எடுப்போம்" என்று சொல்வதற்குக்கூட விஜய்க்குத் துணிச்சல் இல்லையா? அவரது மவுனம் குற்ற உணர்ச்சியால் வந்ததா அல்லது வேறு யாரையாவது காப்பாற்றவா?

முடிவுக்கு வர வேண்டிய போலி அரசியல்!

திரைப்படங்களில் போதைக்கு எதிராகப் பஞ்ச் டயலாக் பேசுவதும், பொதுமேடைகளில் போதை ஒழிப்பு நாடகமாடுவதும் வேறு; நிஜ வாழ்க்கையில் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நடக்கும் சம்பவங்கள் வேறு என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

தோளோடு கட்டி அணைத்த புகைப்படங்கள் பொய் சொல்லாது. இந்த சர்வதேச மெத் வழக்கில் பூபாலனுடன் தொடர்பில் இருந்த உயர்மட்ட அரசியல் புள்ளிகள் யார் யார், கடத்தல் பணத்தில் கட்சிக்கு நிதி வந்ததா என்ற முழு விவரங்களும் தேசிய புலனாய்வு அமைப்புகளின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் போலி அரசியல்வாதிகளுக்கு மக்கள் விரைவில் சம்மட்டி அடி கொடுப்பார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+