ஆனா உன் கூட வாழ்க்கை.! ரவீந்தர் வெளியிட்ட பதிவிற்கு மகாலட்சுமி கூறிய ஒரே பதில்.. புலம்பும் ரசிகர்கள்

நடிகை மகாலட்சுமியை பற்றி அவருடைய கணவர் ரவீந்தர் புகழ்ந்து கவிதையோடு பதிவு வெளியிட்ட இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு வார இறுதி நாட்களில் வெளியே சென்றிருக்கும் இடத்தில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

வி ஜே மகாலட்சுமி குறித்து அவருடைய கணவர் ரவீந்தர் கவிதைகளை கூறியிருக்கிறார். அதில் தன்னை ஒரு யானை குட்டி என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்.

ரவீந்தர் வெளியிட்ட பதிவிற்க்கு மகாலட்சுமி நீங்க எப்பவும் என்னுடைய செல்ல குட்டி என்று பதிலுக்கு சமூக வலைத்தளத்தில் காதல் மழை பொழிந்து இருக்கிறார்.

எத்தனை குட்டி தான்

எத்தனை குட்டி தான்

அதிகமான ரசிகர்களால் பொறாமையில் பார்க்கப்படும் ஜோடி என்றால் அது மகாலட்சுமி மற்றும் ரவீந்திர் ஜோடியாக தான் இருக்கும் இவர்கள் திருமணத்தில் இருந்து இப்ப வரைக்கும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் வெறுப்பேத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் வார இறுதி நாட்களை வெளியே சென்று மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு அப்படியே அவர்கள் புதியதாக வாங்கிய காருக்குள் அமர்ந்தபடி ஒரு செல்பி எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தட்டிவிட்டு இருக்கின்றனர். அதற்கு ரவீந்தர் நீ மஞ்சள் நிறம் கொண்ட மான்குட்டியோ இல்லை மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ ஆனால் உன் கூட வாழ்க்கையை ரசித்து வாழ்கிற யானை குட்டி நான்தான் பொண்டாட்டி..! என்று செல்லமாக கொஞ்ச, அதற்கு மகாலட்சுமி நீங்க தான் எப்போதும் என்னுடைய செல்லகுட்டி என்று பதிலுக்கு சமூக வலைத்தளத்திலேயே குட்டி குட்டியாக போட்டு வருகிறார்கள். இதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்தும் சிலர் வாழ்த்துக்கள் கூறியும் வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்

கடந்த வருடத்தில் சமூக வலைத்தளத்தை புரட்டி போட்ட ஜோடி என்றால் அது மகாலட்சுமி ரவீந்தர் ஜோடியாக தான் இருக்க முடியும். இவர்களுடைய திடீர் திருமணம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பலருடைய அதிர்ச்சிக்கு காரணமாக மாறிவிட்டது. சின்னத்திரை நடிகையாக இருக்கும் விஜே மகாலட்சுமி ஆரம்பமானது என்னவோ தொகுப்பாளராக இருந்தாலும், தற்போது சீரியல்களில் கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து முன்னணி சேனல்களிலும் இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் வில்லி கேரக்டரில் வாசுகியாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் ரிவ்யூ

பிக் பாஸ் ரிவ்யூ

வி ஜே மகேஸ்வரியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகர் ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும், அவரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக்கியது என்னவோ பிக் பாஸ் ரிவ்யூ நிகழ்ச்சி தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் ரிவ்யூ செய்து அதிகமாக சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இவருடைய ரிவ்யூ பார்ப்பதற்காகவே அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய திருமணமும் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியது.90's கிட்ஸ்களின் பேவரைட்டாக இப்ப வரைக்கும் இருந்து வரும் மகாலட்சுமி திடீரென அவருடைய உருவத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து விட்டாரே என்று அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

மகிழ்ச்சியான வாழ்க்கை

ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த விஜே மகாலட்சுமி தான் தன்னுடைய திருமணத்திற்கு அதிகமாக ரவீந்தரை அவசரப்படுத்தி இருக்கிறாராம். தற்போது இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. அதிகமான நெட்டிசன்கள் இவர்களுடைய திருமணம் நடைபெற்ற போது இவர்கள் இருவரும் சீக்கிரத்தில் பிரிந்து விடுவார்கள், பணத்திற்காகத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களை பரப்பி வந்தனர். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் ஜோடி தங்களுடைய அன்றாட பணிகளில் பிஸியாகவே இருந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+