ஆட்டோகிராஃபில் பார்த்தவரா இவர்! திருப்பாச்சியில் விஜய்யின் தங்கை! அடையாளமே தெரியாம மாறிவிட்டாரே
சென்னை: ஆட்டோகிராப், திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நடிகை மல்லிகா. இவர் கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது கணவர், பிள்ளைகளை பார்த்துக் கொண்டு குடும்பத் தலைவியாக இருக்கிறார். இவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில் மல்லிகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகை மல்லிகா. இவருடைய இயற்பெயர் ரீஜா ஜான்சன். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் மலையாளத்தில் நிழல் குத்து என்ற படம் ஆகும்.

இதையடுத்து சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு பியாரி மொழி படத்திற்கும் தேசிய விருதை பெற்றுள்ளார். திருப்பாச்சியில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.
மகாநடிகன், குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும், தோட்டா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு மல்லிகாவுக்கு திருமணமானது. இதையடுத்து அவர் அந்த ஆண்டு முதலே சினிமாவில் நடிக்கவில்லை.
இவர் கடைசியாக நடித்த படம் மலையாளத்தில் கதவீடு என்பதாகும். இந்த படத்திற்காக கேரள அரசின் விருதை பெற்றுள்ளார். இவருடைய கணவர் பெயர் ஜெகதீஷ் சந்திரன். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தனது கணவர், இரு மகன்களுடன் இருக்கிறார். மல்லிகா, நீல நிற புடவை அணிந்துள்ளார். ஏதோ கோவிலில் தனது இரண்டாவது குழந்தைக்கு உணவு ஊட்டும் சடங்கு செய்வது போல் தெரிகிறது. இதில் மல்லிகா பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். நெட்டிசன்கள், மல்லிகா மேடம் எங்கே போய்விட்டீர்கள். உங்களை படங்களில் பார்க்க முடிவதில்லையே என கேட்கிறார்கள்.
அது போல் இவர் அஞ்சலி எனும் சீரியலிலும் திருவிளையாடல் என்ற சீரியலில் குணவதி எனும் கேரக்டரில் நடித்துள்ளார். இவர் தங்கையாக நடித்தாலே நிச்சயம் இவர் பக்கத்து வீட்டு பெண் போல் அந்த கேரக்டருடன் ஒன்றி இருப்பார்.












Click it and Unblock the Notifications