தனுஷ் என் கிளாஸ்மெட்.. சினிமாவை விட்டு விலக காரணம் இதுதான்.. அஜித், விஜய்யோடு நடித்த மந்த்ரா ஓபன்
சென்னை: நடிகர் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நடிகை மந்த்ரா பல வருடங்கள் கழித்து தற்போது பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அப்போது நடிகர் தனுஷ் தன்னுடைய கிளாஸ்மட் தான் என்றும், தான் சினிமாவை விட்டு விலக காரணம் என்ன என்பது பற்றியும் பேசியிருக்கிறார்.
ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட அவர்களுடைய காட்சிகளை பார்க்கும்போது அவர்களுடைய நினைவுகள் டக்கென்று மனதிற்குள் வந்துவிடும். சில நடிகைகள் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள். பல வருடங்கள் கழித்து அவர்களை ஏதாவது ஒரு பேட்டிகளில் பார்க்கும்போது இவரா அவர் என்று சொல்லும் அளவிற்கு மாறிவிடுகிறார்கள்.

அப்படி ஒருவர் தான் நடிகை மந்த்ரா. நடிகர் அஜித், விஜய், அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பிரபலமான மந்த்ரா இப்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே நடிக்க ஆரம்பித்த மந்த்ரா நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதுபோல அவர் அந்த நேரத்தில் அவருக்கு போட்டி நடிகைகளாக இருந்த சிம்ரன், ரம்பா போன்றவர்கள் என்னுடைய நெருங்கிய தோழிகள் என்று அவரே கூறியிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக இருக்கும் அஜித், விஜயுடன் நடித்திருக்கிறார். அதிலும் ரெட்டை ஜடை வயசு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், லவ் டுடே திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாகவும் நடித்து இருப்பார்.
அஜித்தோடு நடிக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அவரை பார்த்துக்கொண்டே இருப்பேன், அந்த அளவிற்கு அவர் அழகாக இருப்பார் என்று சொன்ன மந்த்ரா, அஜித் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதாக தான் அவர் நடித்த ராஜா திரைப்படத்தில் குண்டு குண்டு வத்தலகுண்டு என்ற பாடலுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடுவதற்கு நான் ஒத்துக் கொண்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
அதுபோல தெலுங்கில் வெளியான அருந்ததீ படத்தில் நான் தான் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் அதற்குள் எனக்கு திருமணம் நடந்து செட்டில் ஆகிவிட்டதால் அந்தப் பட வாய்ப்பு பறிபோய்விட்டது என்ற கூறி இருக்கும் மந்திரா நடிகர் தனுஷின் கிளாஸ்மெட்டாம். கடைசியாக நான் ஓடிடியில் பார்த்த திரைப்படம் கூட ராயன் திரைப்படம் தான். எனக்கு தனுஷை ரொம்பவும் பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
அதுபோல நான் நடித்த திரைப்படங்களில் என்னுடைய காட்சிகள் கொஞ்சம் கிளாமராகவே இருக்கும். அதிகமாக மார்டன் உடையில் வருவது போன்று இருக்கும். அதிகமாக டி-ஷர்ட், பேண்ட், ஸ்லீவ்லெஸ் போடுவது போலவே இருக்கும். ஆனால் நிஜத்தில் நான் அதுவெல்லாம் போடவே மாட்டேன். எனக்கு புடவை கட்டுவதற்கு தான் பிடிக்கும்.
அதனால் தான் தெலுங்கில் ஒரு படத்தில் கூட நான் கிளாமரா நடித்திருக்கவே மாட்டேன். அதிலும் மழை கட்சிகளில் நான் நடித்தால் கூட அதை அங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆரம்பத்தில் எனக்கு சில திரைப்படங்கள் தமிழில் கிடைத்தது. பிறகு என்ன ஆச்சுன்னு தெரியல எனக்கு தமிழ் படங்களே கிடைக்காமல் போய்விட்டது. அதனால் தான் நான் தெலுங்கில் செட்டில் ஆகிவிட்டேன் என்று அந்த பேட்டியில் மந்த்ரா கூறி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications