இந்த குட்டி தொகுப்பாளர் யாருன்னு தெரியுதா? இப்போ டாப் நடிகை.. அவருடைய கணவரும் நடிகர் தான்
சென்னை: தற்போது பிரபல நடிகையாக இருக்கும் ஒருவருடைய குழந்தை வயது புகைப்படம் இணையத்தில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த நடிகை இப்போது பிரபலமாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்திலேயே குழந்தை தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அது குறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நமக்கு பரீட்சையமான நபர்களின் சிறு வயது புகைப்படங்களை பார்க்கும்போது நமக்குள் ஒரு பூரிப்பு வரும். அடடா இது அவரா? என்று நம்மை அறியாமலே ஒரு வியப்பு ஏற்பட்டுவிடும். அந்த மாதிரி தான் நடிகை மஞ்சிமா மோகனின் சிறு வயது புகைப்படம் இப்போது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

மஞ்சிமா மோகன் 1977 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக 2001 ஆம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரம் ஆக இருந்த மஞ்சிமா 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சத்திரியன், இப்படை வெல்லும் உள்ளிட்ட பல படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தார். அதோடு தெலுங்கிலும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய கேரக்டரில் மஞ்சுமா நடித்திருந்தார்.

அதுபோல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும் போது தான் மஞ்சிமாவிற்கும் கௌதம் கார்த்திக்கும் காதல் ஏற்பட்டு பிறகு 2022 ஆம் ஆண்டு இரு வீடடாரின் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதே நேரத்தில் மஞ்சிமா உடல் எடை கூடி இருக்கிறார் என்று அதிகமான விமர்சனங்களை சந்தித்தார். அதற்குப் பிறகு தீவிரமான உடற்பயிற்சியின் காரணமாக இப்போது உடல் எடையை குறைத்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு எஃப் ஐ ஆர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் மஞ்சிமா சிறுவயதில் தொகுப்பாளராக இருந்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் சீரியல் நடிகையாக இருந்து தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியிருக்கும் பிரியா பவானி சங்கர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications