ஓணம் நாளில் விளக்கு பக்கத்தில் மீனா.. சொல்லாமல் சொல்லுவது இதுதானா? ரசிகர்கள் சொன்ன வார்த்தை
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இருந்து இன்னும் அழிக்க முடியாத பெயர்களில் நடிகை மீனா பெயரும் இடம் பிடித்திருக்கும். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோயினக கலக்கியவர். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கி, முன்னணி நடிகையாக இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் ஓணம் கொண்டாடி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகை மீனாவின் ஓணம் கொண்டாட்டம்
பொதுவாக பண்டிகைகளை சில நடிகைகள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ ஆனால் போட்டோ சூட் மட்டும் எடுத்து விடுவார்கள். அதிலும் ஓணம் பண்டிகையான இன்று பல நடிகைகளும் போட்டோஸ்களை குவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை மீனா பகிர்ந்த போட்டோ தான் இப்போ ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து இருக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் வயசு ஆக ஆக இன்னும் அழகு கூடிக் கொண்டே போகிறதே என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

மீனாவின் ஹிட் படங்கள்
சில ரசிகர்களுக்கு இந்த போட்டோஸ்கள் ஓணம் கொண்டாட்டத்தை விட மீனாவின் 90ஸ் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து விட்டதாம். ஒரு காலத்தில் எஜமான், வீரா, முத்து, அவ்வை சண்முகி, நாட்டாமை, பாரதி கண்ணம்மா என பல படங்களில் குடும்பப் பெண், காதலி, கிராமத்து பெண் என விதவிதமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மீனா இப்போது திரைப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அதில் நச்சுனு ரசிகர்களுக்கு மனதில் நிற்கிற மாதிரி கேரக்டரில் நடித்து விடுகிறார்.

ரசிகர்கள் கேள்வி
அதுபோலத்தான் அவர் நடித்த திருஷ்யம் படம் 3 பாகத்தை தொடர்ந்து இப்போது 4வது பாகம் உருவாக போகிறது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த படத்தை பற்றி கலாய்த்து வருகிறார்கள். ஆனால் மீனாவை மட்டும் ரசிகர்களால் ஒன்றுமே சொல்லவே முடியவில்லையாம். அதிலும் சில நெட்டிசன்கள் இப்போது மீனா ஓணம் கொண்டாடி போட்டோஸ் போட்டு இருக்கிறாரா? அல்லது திரிஸ்யம் 4க்கு அப்டேட் கொடுக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
