ஆசையா எங்களுக்காக செய்து கொடுத்தாரு.. ஆனால்! கணவர் குறித்து முதல் முறையாக மீனா சொன்ன தகவல்
சென்னை: நடிகை மீனா பேட்டி ஒன்றில் தன்னுடைய மறைந்த கணவர் வித்யாசாகர் உயிரோடு இருக்கும்போது செய்த செயல்கள் குறித்து நெகிழ்வோடு பேசி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிப்பை தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகை ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய கணவர் கடந்த 2022-ல் உடல்நிலை குறைபாட்டால் காலமானார். மீனாவிற்கும் அவருடைய கணவர் வித்தியா சாகர்க்கும் கடந்த 2009 ஆம் ஆண்டில் திருமணம் நடந்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். அவர் நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

மீனா பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் அதிகமாக சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த நிலையில் அவருடைய கணவரின் மறைவுக்குப் பிறகு அதிகமாக பேசப்பட்டார். அதிலும் கணவர் இறந்த ஒரு சில மாதங்களிலேயே மீனா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்று வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. அது குறித்து சில முறை மீனா கோபமாக மறுப்பு தெரிவித்து விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவர் பற்றி அடிக்கடி செய்திகள் பரவி வருகிறது.
அதுபோல மீனாவின் கணவர் இறுதிச்சடங்கில் மீனாவும் அவருடைய மகளும் இறுதி காரியங்கள் செய்ததும் கூட அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதற்கும் மீனா தெளிவாக பதிலடி கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் அவருடைய கணவர் இறந்து சில வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது ஒரு பேட்டியில் தன்னுடைய கணவர் குறித்து மீனா உருக்கமாக பேசியிருக்கிறார். அதில் என்னுடைய கணவர் வித்யாசாகர் இருந்த வரைக்கும் அழகாக சமையல் செய்வார்.
எனக்கு சமையல் செய்ய தெரியாது என்பதால் என்னையும் கூப்பிட்டு அடிக்கடி இதை கட் பண்ணி தான் அதை கட் பண்ணி தான் என்று சொல்லுவார். ஆனால் என்னால் சரியாக சமையல் செய்ய முடியாது அவருக்கு உதவும் போதும் சில முறை நான் சொதப்பி விடுவேன். அவருக்கு பிடித்த சாப்பாடு நான் செஞ்சு கொடுத்தது கிடையாது. ஆனால் அவர் தான் எங்களுக்காக பார்த்து பார்த்து சமையல் செய்து தருவார். அதுவும் ஸ்டீல் பிஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை அவர் அழகாக செய்து தருவார் என்று அந்த பேட்டியில் வித்யாசாகர் குறித்து மீனா பேசியிருக்கிறார்.
அதுபோல எனக்கு என்னுடைய கணவர் தான் பெரிய நண்பராகவும் இருந்தார். நான் எந்த இடத்தில் டவுன் ஆக பீல் பண்ணினாலும் உடனே எனக்கு சரியான அறிவுரைகளை சொல்லுவார். இதை செய்யலாமா? வேண்டாமா? என்று நான் குழப்பத்தில் இருக்கும்போது எனக்கு அவர் கொடுக்கும் அறிவுரைகள் தான் பல பிரச்சனைகளில் இருந்து என்னை மீண்டு வர செய்தது என்று அந்த பேட்டியில் எமோஷனலாகவும் மீனா பேசியிருக்கிறார்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications