பிரண்ட்ஸ் படம் நான் பண்ண வேண்டியது.. ஆனால் நடிக்காத காரணம்! விஜய் கேட்ட அந்த வார்த்தை.. மீனா ஓப்பன்
சென்னை: நடிகை மீனா தான் இதுவரைக்கும் விஜய் உடன் ஒரு படத்தில் கூட நடிக்காத காரணம் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறார். விஜய்யோடு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதை மீனா மறுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் கூட விஜய் உடன் நடிக்காத காரணம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மீனா பல நடிகர்களோடு தொடர்ச்சியாக நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு போன்ற பல நடிகர்களோடு குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து அவர்களுக்கு கதாநாயகியாகவும் மீனா நடித்திருக்கிறார். தமிழில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் மீனா நடித்திருந்தாலும் இவருக்கு எல்லா மொழிகளுமே அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களோடு மட்டும் நடிக்காமல் இருந்திருக்கிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் விஜய், அரவிந்தசாமி போன்ற ஒரு சிலரோடு மட்டும் தான் நடிக்கவில்லை. அதற்கு காரணம் கால் சீட்டு பிரச்சனை தான். அந்த நேரத்தில் நான் அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு சில நடிகர்களின் திரைப்படங்களுக்கு கால் சீட்டு கொடுக்க முடியாமல் போய்விட்டது.
அதிலும் விஜயுடன் நடிக்க எனக்கு பல படங்களில் வாய்ப்பு வந்தது. அது எல்லாமே கால்ஷீட் பிரச்சனையால் தான் நடிக்க முடியாமல் இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சொல்லலாம். அந்த திரைப்படத்தில் கதை எல்லாம் கேட்டேன் ஆனாலும் அவர்கள் சொன்ன நாட்களுக்கு என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது. அதனால் தான் அது திரைப்படத்தில் நடிக்கவில்லை.
அது பற்றி விஜய் என்னுடைய மகள் அவரோடு தெறி திரைப்படத்தில் நடிக்கும் போது நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபோது என்னிடம் கேட்டார். நீங்க வேணும்னு தானே என்கூட நடிக்கல, நான் அந்த நேரத்தில் புதுமுகம் என்பதால் நீங்கள் என்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க அப்படித்தானே என்று அவர் சிரித்துக் கொண்டே கேட்டார். ஆனால் அது எல்லாம் உண்மை கிடையாது.
அந்த நேரத்தில் நான் ஒரு நாளைக்கு மூன்று படங்களுக்கு மேலே நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் எனக்கு கொடுக்க முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன். அவரும் புரிந்து கொண்டார். அதுபோல விஜய் உடன் ஒரு பாடலுக்கு நான் டான்ஸ் ஆடி இருந்தேன். ஏற்கனவே அந்தப் பாடலின் தெலுங்கு ரீமேக் நான்தான் டான்ஸ் ஆடி இருந்தேன்.
அதுபோலத்தான் தமிழிலும் இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் தமிழில் "சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கிறேன்" என்று பாடல் வரிகளை கேட்டு நான் ரொம்ப அதிர்ச்சி ஆகிவிட்டேன். தெலுங்கில் அந்த பாடலில், "பாடல் பெரிசா டான்ஸ் பெருசா" என்கிற மாதிரி வரிகள் வரும். ஆனால் தமிழில் மொத்தமாக மாற்றி வைத்திருந்தார்கள். இது எனக்கு பெரிய அளவில் அதிர்ச்சியாக தான் இருந்து.
கதாநாயகியாக இருந்துட்டு இப்படி ஒரு பாடலில் நடிச்சிருக்கோமே இனி நம்மளோட எதிர்காலம் எப்படி இருக்கணும்னு நான் அந்த நேரத்தில் யோசித்தேன். ஆனால் பாடல் வெளியான பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. அதுபோல பிரெண்ட்ஸ் திரைப்படத்தின் தெலுங்கு வெர்சலில் நான்தான் நடித்திருந்தேன். அதனால் தான் எனக்கு தமிழிலும் பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது கால்ஷீட் பிரச்சனையால் வேறு வழியில்லாமல் தான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்தேன் என அந்த பேட்டியில் நடிகை மீனா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications