விஜய் இன்னொருத்தங்க கிட்ட என்னை பற்றி “அப்படி” சொல்லி இருக்காரு! நான் அதை எதிர்பார்க்கல..மீனா ஓப்பன்
சென்னை: நடிகை மீனா சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் தன்னை பற்றி சொன்ன வார்த்தை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார் அதோடு விஜய் நடித்த ஷாஜகான் திரைப்படத்தில் அவரோடு ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியது குறித்தும் மீனா அந்த பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகை மீனாவிற்கு பெரிய அளவில் அறிமுகமே தேவையில்லை. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி கதாநாயகியாக நடித்த மீனா இப்போது முன்னணி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சில தினங்களாகவே மீனா தன்னுடைய திரை அனுபவங்கள் குறித்து பேசியது தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பேட்டியில் நான் ரஜினிக்கு மட்டும் மகளாக நடிக்கவில்லை கமல்ஹாசன், மோகன்லால் என்று பல பிரபலங்களுக்கு மகளாக நடித்திருக்கிறேன். பிறகு அவர்களோடு ஜோடியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் எல்லோருக்கும் தமிழில் ரஜினியுடன் நான் குழந்தையாக நடித்தது மட்டும்தான் தெரியும்.
அதனால் அதைத்தான் எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பிற மொழிகளில் நடிகர் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருக்கிறேன். பிறகு அவரோடு பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறேன், அதெல்லாம் தெரியாது என்று சொன்னதை தொடர்ந்து கமலுக்கு மகளாக மீனா நடித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
அதை தொடர்ந்து விஜய் குறித்து மீனா பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் அதுவெல்லாம் கால்ஷீட் பிரச்சனையால் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதற்கு பிறகு ஷாஜகான் படத்தில் அவர் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு வந்தது. அதில் டான்ஸ் ஆட எனக்கு ஆரம்பத்தில் விருப்பமில்லை காரணம் அந்த நேரத்தில் எல்லாம் பல படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் யாரும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட போக மாட்டாங்க.
அதனால் நானும் ரொம்பவே யோசித்தேன் ஆனால் இயக்குனர் தான் என்னிடமும் என்னுடைய அம்மாவிடமும் பேசி சம்மதம் வாங்கினார். அதற்கு பிறகு சூட்டிங் ஸ்பாட்டில் நானும் விஜய்யும் தனித்தனியாக உட்கார்ந்து டான்ஸை பார்த்துக் கொண்டிருப்போம். யார் எப்படி ஸ்டெப் போடுகிறார்கள் என்பதை பார்த்து வைத்து விடுவோம் பிறகு எங்களுக்கு டேக் ஆரம்பித்ததும் ஒரே டேக்கில் நாங்கள் முடித்து விடுவோம்.
அப்போதெல்லாம் நான் விஜய்யோடு அதிகமாக பேசியது கிடையாது. நானும் ஷை டைப் அமைதியாக இருப்பேன். அவரும் அதுபோல அமைதியாக இருப்பாரு. ஆனால் இன்னொருத்தங்க அவரிடம் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யாரு என்று கேட்டபோது மீனா என்று சொல்லி இருக்காரு.. அது எனக்கு ஆச்சரியமா இருந்தது, என்று அந்த பேட்டியில் மீனா விஜய் குறித்து பேசி இருக்கிறார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications