நடிகை மீனாவுக்கு வருது அதிர்ஷ்டம்? ராஜ்ய சபாவில் நட்சத்திரங்கள்.. ஷூட்டிங்கில் யாரந்த யங் அரசியல்வாதி
சென்னை: நடிகை மீனாவிற்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று சோஷியல் மீடியாவில் கடந்த மாதம் செய்திகள் பறந்தன.. ஆனால், அமைச்சர் பதவிக்கான வாய்ப்புகள் குறைவு என்றும், வரப்போகும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாநில அளவில் மட்டும் மீனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் மற்றொரு செய்தி வலம்வந்தன.. எனினும் இதன் உண்மைத்தன்மை இதுவரை தெரியவில்லை.. இந்நிலையில், நடிகைகள் அரசியலில் நுழைவது குறித்து டாக்டர் காந்தராஜ் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், சேனல் ஒன்றில் பேட்டி தந்திருந்தார்.. அதில், "நடிகை மீனா சிறுக சிறுக சம்பாதித்து பலகோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். அந்த சொத்துக்களுக்கு பாதுகாப்பாளர்களையும் நியமித்து வைத்துள்ளார்,

மீனாவின் சொத்துக்கள்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது கணவர் இறந்துவிடவும், மீனாவை சுற்றிலும் பல தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பொருளாதார ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் தந்துள்ளனர்.. இது தாங்கமுடியாமல்தான், அரசியல் கட்சியில் சேரும் நிலைமை மீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள தனது சொத்துக்களை விற்றுவிட்டு திருவனந்தபுரத்திலே செட்டில் ஆகி விட முயற்சித்திருந்தார் மீனா.. ஆனால் அவரின் சொத்துக்களை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் மீனாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதால், பாதுகாப்பு வேண்டி கட்சியில் இணைவதாக தெரிகிறது" என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார்.
முன்னாள் நடிகைகள்
இந்நிலையில், Retro Voice என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "மீனா முன்னாள் நடிகை.. தற்போது பட வாய்ப்பும் இல்லை.. அதனால், அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.. வரும் தகவல்களை வைத்து பார்த்தால், அடுத்தவாரமே மந்திரி பதவி கிடைக்கலாம்..
உடனடியாக மந்திரியாக வாய்ப்புள்ளதாகவும், மீனாவை தொடர்ந்து குஷ்பு போன்றோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.. இந்தநேரத்தில் நமீதாவுக்கெல்லாம் ஆறுதலை சொல்ல வேண்டியிருக்கிறது.. விஜயதாரணி போன்றோர் இலவு காத்த கிளியாகிவிடுவார்கள் போல..
திரைத்துறை பிரபலங்கள் தங்களை ஆதரித்தால், வெற்றி பெற்றுவிடலாம் என்ற அபிப்பிராயம் பாஜகவுக்கு ஆழமாக விழுந்துவிட்டது. ராஜ்ய சபாவில் பெரும்பாலும் முன்னாள் நடிகைகள்தான் இருக்கிறார்கள்.. ஜெயப்பிரதா, ஹேமமாலினி, ஜெயபாதுரி, ரேகா என்று என்று நட்சத்திர கூட்டமாகவே இருக்கிறது..
ராஜ்யசபா நடிகைகள்
ராஜ்ய சபா என்றாலே, அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், போன்றோருக்காக உருவாக்கப்பட்ட இடத்தில், இன்று இதுபோன்ற தேசத்தியாகிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.. லாபம் கிடைக்கும் என்பதால், இப்படி அரசியலில் சேருகிறார்கள்..
படவாய்ப்பு இல்லாத ரிடையர் ஆன நடிகைகளுக்குதான் இப்படியான வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது... அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு நடிகையின் ஷூட்டிங்கில், டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து இளைஞர் போல ஒருவர் அங்கு எப்போதும் உட்கார்ந்திருப்பார்.
யாரந்த அரசியல்வாதி
அப்போதெல்லாம் சினிமா தயாரிப்பாளர், டைரக்டர்களுக்கு அரசியல் பற்றி பெரிதாக யோசிக்க மாட்டார்கள்.. அதனால், அந்த நபரை யார் என்றும் தெரியவில்லை.. கடைசியில் பார்த்தால், அவர் அப்போதைய சிட்டிங் அமைச்சர் ஆவார். ஆனால், அந்த அமைச்சர், இன்று வேறு கட்சியில் இருக்கிறார்..
ஆனால், பிரபலமாக இருப்பதாலேயே மீனாவின் பெயர் சமீபகாலமாகவே அடிக்கடி அடிபட்டு வருகிறது. ஆனால், அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை.. தேவையில்லாத வதந்திகளை சோஷியல் மீடியாவில் கிளப்பிவிடுவதற்கென்றே ஒரு குரூப் உள்ளது.. இதையெல்லாம் கடந்து போய்விட வேண்டும்.
மீனாவுக்கு இன்னும் 50 வயதுகூட ஆகவில்லை.. சிறுவயதிலிருந்து ஆக்டிவ்வாகவே இருந்தவர்.. எனவே, இப்போதும் சுறுசுறுப்பாக இயங்க நினைக்கிறார்.. சினிமாவும் இன்று விழுந்துவிட்டதால், அரசியல் பாதையை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது.. அவருக்கும் 50 வயதாகவில்லை.. ஆக்டிவ்வாக இருந்து, தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டியவர்.. ஆனால், தொழில் இல்லை, மன அழுத்தமும் சேர்ந்து கொண்டதால், விபரீதத்தை நாட வேண்டியதாயிற்று" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications