நடிகையை கட்டிப்பிடித்து டார்ச்சர் தந்த முகேஷ்? அந்த மினு முனீரை நினைவிருக்கா? அவர்தான் இப்ப அரெஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 14 வயது சிறுமிக்கு சினிமா ஆசை காட்டி, சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கிய பிரபல கேரள நடிகை மினு முனீர் கைதாகி உள்ளார்.. சம்பவம் நடந்து 10 வருடம் கழித்து நடிகை கைதாகி, விசாரணைக்குள்ளாகி இருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை தந்து வருகிறது. கேரள சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக கடந்த வருடம் இந்த நடிகை, புகார் கூறி பலரையும் அதிர வைத்திருந்தார். அவரது அந்த குற்றச்சாட்டை, தற்போது சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளதுடன், சிறுமிக்கு நடிகை செய்தது நியாயமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

10 வருடங்களுக்கு முன்பு, நடிகை மினு முனீர், 14 சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து சென்னை திருமங்கலம் லாட்ஜில் தங்க வைத்துள்ளார். 5 பேரிடம் சிறுமியை அறிமுகம் செய்து வைத்தாராம் நடிகை முனீர்..

Television Actress Minu Muneer Actor Mukesh

நடிகை கைது

அப்போது அங்கிருந்த 4 பேரில் 2 பேர், சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது. பிறகு சிறுமி அங்கிருந்து தப்பி கேரளாவுக்கு சென்று, இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.

கடந்த வருடம் ஹேமா கமிட்டி நியமிக்கப்பட்டதையடுத்து, பலரும் பாலியல் புகார்களை தந்து வந்தனர்.. அப்போது 10 வருடங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண், (இப்போது 24 வயதாகிறது) நடிகை முனீர் மீது புகாரை தந்தார்.. இந்த புகாரில்தான் நடிகை தற்போது கைதாகி, போலீஸாரின் பிடியில் உள்ளார்.

முகேஷ் டபுள் மீனிங்

கடந்த வருடம் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதுமே, நடிகைகள் ஒவ்வொருவராக பாலியல் புகார்களை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது முன்வைத்தனர்.. அப்போது நடிகை மினு முனீர் அளித்திருந்த குற்றச்சாட்டு, மலையாள சினிமாவை மேலும் கலங்கடிக்க செய்தது.

நடிகை மினு முனீர் இது குறித்து அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், "கடந்த 2008ல் மலையாளத்தில் "தே இங்கோட்டு நோக்கியே" என்கிற படத்தில் நடித்தபோது அதன் கதாநாயகன் ஜெயசூர்யா, என்னை தனியாக ஒரு பிளாட்டிற்கு வருமாறு அழைத்தார்.. ஆனால், நான் மறுத்துவிட்டேன். அதேபோல நடிகர் முகேஷ் டபுள் மீனிங்கில் பேசி என்னிடம் எல்லை மீறி நடக்க முயன்றார்.

டா தடியா என்கிற படத்தில் நடித்தபோது, மணியம்பிள்ளை ராஜு, நான் தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு வர விரும்புவதாக சொன்னார்.. ஆனால், நான் அதற்கு மறுக்கவும், உடனே என்னிடம் ஷூட்டிங்கில் கோபத்தை வெளிப்படுத்தினார்" என்று பதிவிட்டிருந்தார்.

கட்டிப்பிடித்து முத்தம்

அதேபோல மினு முனீர், சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், "நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர்.. மற்ற 2 நடிகர்களும் தனித்தனி சந்தர்ப்பங்களில் என்னிடம் தவறாக நடந்துகொண்டனர்.

"டி இங்கொட்டு நோக்கியே" என்ற ஷூட்டிங்கின்போது, ஒருநாள் நான் பாத்ரூமுக்கு சென்று வந்தபோது, ஜெயசூர்யா என்னை பின்னாடியிருந்து வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிட்டார்.. இதனால் நான் அதிர்ச்சியடைந்து, பயந்துபோய் அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டேன். தன்னுடைய ஆசைக்கு ஒத்துழைத்தால் பலன் கிடைக்கும் என்று ஓபனாகவே சொன்னார்.. நான் இதற்கு மறுப்பு சொன்னதால், எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

காலண்டர் ஷூட்டிங்

நடிகர் முகேஷூடன் "காலண்டர்" படத்தின் ஷூட்டிங்கின்போது , என்னிடம் தவறாக நடந்து கொண்டார்... தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, என்னுடைய நடிகர் சங்க விண்ணப்பத்தை முகேஷ் நிராகரித்துவிட்டார்.. நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேல பாபு என்னிடம் வெளிப்படையாக பாலியல் ரீதியாக பேசி தொல்லை தந்து துன்புறுத்தினார்கள்.

அட்ஜெஸ்ட்மென்ட்

அதனால், மலையாள திரையுலகத்திலிருந்து வெளியேறி, சென்னைக்கு குடியேறிவிட்டேன். இது தொடர்பாக மலையாளத்தில் வெளியான பத்திரிகையில் எனது குற்றச்சாட்டு தொடர்பான கட்டுரையும் வெளியானது.

"அட்ஜெஸ்ட்மென்டுக்கு ஒத்துழைக்க மறுத்த மினு மலையாள சினிமாவிலிருந்து வெளியேறினார்" என்று அந்த கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. நான் அனுபவித்த துன்பங்களுக்கு இப்போது நீதி கேட்டு தற்போது இதனை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளேன்" என்றெல்லாம் நடிகை முனீர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த நடிகை மீதே பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+