பிக் பாஸ்க்கு பிறகு ரச்சிதாவுக்காக நடிகை மும்தாஜ் செய்த செயல்..இவர்களுக்குள் இப்படி ஒரு உறவு முறையா?

ரச்சிதா ஃபேன்ஸ் மீட்டிங் வைத்திருக்கும் போது அவரை பார்ப்பதற்காக நடிகை மும்தாஜ் வந்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா தன்னுடைய ரசிகர்களை நேரில் சந்தித்து ஃபேன்ஸ் மீட்டிங் வைத்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

ஃபேன்ஸ் மீட்டிங்கில் நடிகை மும்தாஜ் கலந்து கொண்டு ரச்சிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ரச்சிதா நடிகை மும்தாஜை அம்மா என்று அழைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் சிலர் பற்றி அதுவரைக்கும் நினைத்திருந்த நினைப்புகளை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாற்றி இருக்கிறார்கள். அந்த மாதிரி தான் ரச்சிதா மகாலட்சுமியும் இருந்து வந்தார். தற்போது நடந்து முடிந்த ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே அதிகமாக சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்தான். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று சொன்னதுமே இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆர்மி அமைக்க தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே இவருக்கு சீரியல் நடிக்கும் போதே அதிகமான ஆர்மிகள் இருந்து வந்தது.

மாறாத கேரக்டர்

மாறாத கேரக்டர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த இடத்திலையும் தன்னுடைய கேரக்டர் மாறவில்லை நான் இப்படித்தான் என்றும், எந்த இடத்தில் தான் பேச வேண்டுமோ அந்த இடத்தில் பேசிக்கொண்டு அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத ஒரு போட்டியாளராகவே ரச்சிதா இருந்து வந்தார். ஆனால் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் வெளியே இப்படி கிடையாது உள்ளே தான் இப்படி இருக்கிறார் என்று அசீம் மட்டுமல்லாமல் ரச்சிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த மைனா நந்தினியும் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் பலர் இவரை இதே காரணத்தை கூறிய நாமினேஷன் செய்து வந்தனர். ஆனாலும் ரச்சிதா 90 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி நேரத்தில் இவர் வெளியேறினார்.

மும்தாஜ் அம்மாவாம்

மும்தாஜ் அம்மாவாம்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது தன்னுடைய ரசிகர்களோடு இவர் ஃபேன்ஸ் மீட்டிங் வைத்து பேசி இருக்கிறார். அப்போது ஏற்கனவே திரைப்படங்களில் பலருக்கும் பரிட்சயமான நடிகை மும்தாஜ் இவருக்கு சிறப்பு விருந்தினராக இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவருடைய விளையாட்டு ரச்சிதாவிற்கு அதிகமாக பிடித்திருந்ததாம். அதனாலே மும்தாஜின் வீடியோக்கள் பலவற்றை இவர் பகிர்ந்து அவரை பாராட்டி இருந்தாராம். அது மட்டுமல்லாமல் அவரை அப்போது அம்மா என்று தான் இவரும் அழைத்து இருந்தாராம்.

ரச்சிதாவின் எதிர்பார்ப்பு

ரச்சிதாவின் எதிர்பார்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மும்தாஜ் வெளியே வந்த பிறகு ரச்சிதாவுக்கு போன் பண்ணி பேசி இருக்கிறார். பிறகு இருவரும் சிலமுறை மீட் பண்ணி இருக்கிறார்களாம். இருவர்களுக்கும் ஏற்பட்ட புரிதல் மற்றும் பாசத்தின் காரணமாக எப்போதுமே மும்தாஜை ரச்சிதா அம்மா என்றுதான் அழைப்பாராம். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் கூட தனக்காக மும்தாஜ் வருவார் என்று இவர் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் மும்தாஜ் அப்போது பிக் பாஸ் டீம் தொடர்பு கொள்ளாததால் அவர் வர முடியாமல் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

அம்மா பொண்ணு சென்டிமென்ட்

அம்மா பொண்ணு சென்டிமென்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா ரசிகர்களோடு ஃபேன்ஸ் மீட்டிங் நடத்தி இருக்கும்போது அந்த இடத்தில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து ரச்சிதாவை மும்தாஜ் பாராட்டி இருக்கிறார். இது பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இப்படி ஒரு அறிமுகம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அது மட்டும் இல்லாமல் மும்தாஜ் குறித்து ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் எதுவும் பேசாத நிலையில் தற்போது இவர் அம்மா என்று மும்தாஜை பாசமாக அழைத்து வருவதும், அதற்கு மும்தாஜ் ஓட பதிலையும் கேட்ட பலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+