நான் “அவரை” தான் காதலிச்சேன் ஆனால்..? கல்யாணம் பண்ணாத காரணம் இதுதான்! நடிகை மும்தாஜ் எமோஷனல்
சென்னை: நடிகை மும்தாஜ் பேட்டி ஒன்றில் தான் காதலித்த நபர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு தான் எதற்காக திருமணம் செய்யவில்லை என்பது பற்றியும் அந்த பேட்டியில் மும்தாஜ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அந்த வகையில் சினிமாவை விட்டு விலகி இருக்கும் மும்தாஜ் பல வருடங்கள் கழித்து பிரபல தனியார் சேனல் ஒன்றில் நடிகை குட்டி பத்மினியோடு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக மும்தாஜ் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான மும்தாஜ் இயக்குனர் டி. ராஜேந்திரனின் படங்களில் அதிகமாக நடித்து பலரையும் கவர்ந்திருந்தார். அதிலும் இவருடைய அறிமுக படமான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் அதுபோல குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து கட்டிபுடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்களால் மறக்க முடியாது. அதுபோல "மல.. மல..மல.. மருதமலை" பாடல் இப்போதும் ஹாஸ்டல் பெண்களின் ஹாப்பி மூட் பாடலாக இருக்கிறது.
இந்தப் பாடலுக்கு கையில் டவலோடு மும்தாஜ் போட்ட ஆட்டத்தை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சில வருடங்களில் மும்தாஜ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சினிமாவில் அதிகமாக கவர்ச்சி கேரக்டரில் நடித்து வந்த மும்தாஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருடைய மனதை கவர்ந்து விட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இவருக்கு மேலும் அதிகமாக ரசிகர்கள் உருவாகி இருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமாக வெளியே தலை காட்டாமல் இருக்கும் மும்தாஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இப்படியான நிலையில் தான் சமீபத்தில் இவர் பிரபல தனியார் சேனலில் நடிகை குட்டி பத்மினிகோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதில் தான் ஒரு நபரை காதலித்தேன் என்பது என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதாவது மும்தாஜ் காதலித்த நபர் சினிமா துறையை சார்ந்தவர் கிடையாதாம். மும்தாஜ்க்கு தெரிந்தவர் தானாம். சில வருடங்களாக இவர்களுடைய காதல் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்ததாம். ஆனால் எல்லோருடைய வாழ்க்கையில் வருவது போல சில பிரச்சனைகள் வந்ததால் இருவருக்கும் இடையே விரிசல் வந்து இருவரும் பிரிந்து போய்விட்டார்களாம்.

அதுபோல குட்டி பத்மினி மும்தாஜிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? உங்களுக்கு அந்த ஆசை வரவில்லையா? என்று கேட்க எனக்கு 20 வயதில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் என்னுடைய உடல்நிலை ரொம்பவும் மோசமாக இருந்தது. அதற்கு பிறகு 26 அல்லது 27 வயதிலும் உடல் நிலையில் நான் பாதிக்கப்பட்டேன். அதனால் திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது.
ஆனாலும் எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். குழந்தைகளோடு இருப்பது எனக்கு கொள்ளை விருப்பம் என்று கண்கலங்கியபடி மும்தாஜ் பேசியிருக்கிறார். அதுபோல தன்னுடைய அண்ணன்தான் தனக்கு பாதுகாப்பாக இருக்கிறார். அண்ணனும் அண்ணன் குடும்பமும் எனக்கு இருக்கிறார்கள் என்று மும்தாஜ் கூறி இருக்கிறார். அதுபோல தான் காதலித்த நபர் குறித்து மும்தாஜ் பேசும்போது கண்கலங்கி ஒரு நிமிடம் பேச முடியாமல் தவித்திருந்தார்.
அதோடு நான் காதலித்த நபர் சினிமா துறையை சார்ந்தவர் இல்லை என்பதால் இங்கே பலருக்கும் அவரை தெரிந்திருக்காது. அதுபோல என்னோடு நடித்த நடிகர்கள் எல்லோருமே ரொம்பவே ஜென்டில்மேன்... எனக்கு சினிமா துறையில் பெரிய அளவில் பிரச்சனை வராமல் என்னோடு நடித்தவர்கள் எனக்கு துணையாக இருந்தார்கள், என்று அந்த பேட்டியில் மும்தாஜ் கூறி இருக்கிறார்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications