Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ளீஸ் அந்த போட்டோவை பார்க்காதீங்க! இப்போ நான் மாறிட்டேன்! கதறி அழுத நடிகை மும்தாஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மும்தாஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஆரம்ப காலத்தில் நடித்த புகைப்படங்களை தயவு செய்து செய்தி சேனல்களில் பயன்படுத்தாதீர்கள் அதுபோல ரசிகர்களும் என்னுடைய பழைய படங்களையும் வீடியோக்களையும் பார்க்காதீங்க என்று பேட்டி ஒன்றில் உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

தான் முழுமையாக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவர் வழியில் நடந்து கொண்டிருக்கிறேன். நான் ஆரம்பத்தில் செய்தது எவ்வளவு பெரிய தவறுகள் என்பது எனக்கு இப்போது தெரிந்ததும் நான் என்னுடைய தவறுகளை புரிந்து விட்டேன். அதனால் என்னுடைய ஆரம்ப காலத்தை குறித்து இப்போது எல்லோரும் பார்க்காதீர்கள் என்று அதில் மும்தாஜ் பேசியிருக்கிறார்.

actress Mumthaj in an interview has made a fervent request that please do not use the photos

அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான மும்தாஜ் இயக்குனர் டி. ராஜேந்திரனின் படங்களில் அதிகமாக நடித்து பலரையும் கவர்ந்திருந்தார். அதிலும் இவருடைய அறிமுக படமான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் அதுபோல குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து கட்டிபிடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்களால் மறக்க முடியாது. அதுபோல "மல.. மல..மல.. மருதமலை" பாடல் இப்போதும் ஹாஸ்டல் பெண்களின் ஹாப்பி மூட் பாடலாக இருக்கிறது.

இந்தப் பாடலுக்கு கையில் டவலோடு மும்தாஜ் போட்ட ஆட்டத்தை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சில வருடங்களில் மும்தாஜ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சினிமாவில் அதிகமாக கவர்ச்சி கேரக்டரில் நடித்து வந்த மும்தாஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருடைய மனதை கவர்ந்து விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இவருக்கு மேலும் அதிகமாக ரசிகர்கள் உருவாகி இருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமாக வெளியே தலை காட்டாமல் இருக்கும் மும்தாஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இப்படியான நிலையில் தான் சமீபத்தில் இவர் பிரபல தனியார் சேனலில் நடிகை குட்டி பத்மினிகோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் ஏற்கனவே நான் ஒரு பேட்டி கொடுத்தேன். அந்த பேட்டியில் நான் நல்லாவே ஏற்றுக்கொண்டு என்னுடைய தவறுகளை புரிந்து மனம் திருந்தி விட்டேன் என்று பேசி இருந்தேன். அது எல்லாம் நான் நாடகம் போடுகிறேன், வைரலாக வேண்டும் என்று நான் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

ஆனால் என்னுடைய கடந்த காலத்தை பற்றி இப்போது தேடாதீர்கள்.. அதுதான் எனக்கு மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது. இப்போது உள்ள இளம் ரசிகர்களுக்கு நான் யார் என்பது தெரியாது... அப்படியே இருந்து விடட்டும் இப்போது உள்ள ரசிகர்கள் இடம் என்னுடைய பழைய புகைப்படத்தையும் வீடியோக்களையும் யாரும் காட்டாதீர்கள். முழுமையாக கடவுளை தேடி தன்னுடைய தவறுகளை எல்லாம் புரிந்து கொண்ட நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுதான் என்று அந்த பேட்டியில் மனம் உருக மும்தாஜ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+