எவர்கிரீன் குயின் நதியாவா இது? குதர்க்கமான பதிவு ஆனாலும் இந்த விளக்கத்தை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்
சென்னை: திரைத்துறையில் அறிமுகமாகி பல வருடங்கள் ஆனாலும் வயதே ஆகாதா என்று ரசிகர்கள் குழம்பும் வகையில் இருக்கும் நதியா தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
எளிமையின் உருவமாய் நதியா வெளியிட்ட புகைப்படத்தை பாராட்டி ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தன்னுடைய புகைப்படத்திற்கு தன்னைப் போலவே எளிமையாய் ஒரு தத்துவத்தையும் கேப்ஷனாக நதியா கொடுத்திருக்கிறார்.

பூவே பூச்சூடவா திரைப்படத்தில் அறிமுகம்
நடிகை நதியாவின் உண்மையான பெயர் சரீனா அனுஷா மோய்டு தானாம். இவர் 1984 ஆம் ஆண்டில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முதல் திரைப்படத்திலேயே எதார்த்தமான அழகால், அதிகமான மேக்கப் இல்லாத பக்கத்து வீட்டு பெண் போன்ற இவருடைய எளிமையான கேரக்டரால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டார். அப்போது தொடங்கிய அதே அழகு இப்ப வரைக்கும் அவரிடம் விட்டு விலகவில்லையே என்று இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த பெயர்
பல்வேறு ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நதியா ஆரம்ப காலகட்டத்தில் எந்த பொருளை எடுத்தாலும் இது நதியா பொருள் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். உதாரணமாக நதியாவின் வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள் என்று சொல்லும் வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் சில வருடங்களாக இவர் திரைப்படங்களை விட்டு விலகி இருந்து தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் அறிமுகமாகி இருக்கிறார். இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் எதிர் பார்க்காத அளவில் இவருடைய பெயரை மீண்டும் பறக்க செய்து விட்டது.

வயசே ஆகாதா
நடிகையாக இருக்கும் இவர் 2008 ஆம் ஆண்டு ஆரோக்கியா பால் மற்றும் தங்கமயில் ஜுவல்லரியின் பிராண்டட் தூதராக கையெழுத்துட்டு இருக்கிறார். ஜெயா டிவியில் நடிகை குஷ்புவுக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கி சின்ன திரையிலும் பிரபலமாகி விட்டார். கதாநாயகியாகவே பார்த்துக் கொண்டிருந்த இவரை இப்போது துணை கதாநாயகியாக பார்த்தாலும் இதுவும் அழகாகத் தான் இருக்கிறது. இவருடைய அழகுக்கு மட்டும் வயதே ஆகாதா என்று இப்பிருக்கும் இளைஞர்கள் வரை இவரிடம் டிப்ஸ் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கமல்ஹாசன் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். அது ரசிகர்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எளிமையான புகைப்படங்கள்
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நதியா அடிக்கடி எளிமையாய் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த புகைப்படத்திற்கு, "நாம் எதை பார்க்கிறோம் என்பதை பொறுத்தே பார்க்கிறோம்" என்று இவர் ஜன்னல் வெளியே வேடிக்கை பார்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்னொரு புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்திலும் இவர் இயற்கையை ரசித்தபடி எளிமையாய் இருக்கும் தோரணையை பார்த்து ரசிகர்கள் எல்லோருக்கும் வருட ஆக ஆக வயது கூடிக் கொண்டே போகும் ஆனால் இவருக்கு மட்டும் தான் வயது குறைந்து கொண்டே போகிறதா? என்று சந்தேகத்தோடு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications