ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை நக்மா.. ஜோதிகா மகள் ஃபங்ஷனில் கலக்குகிறாரே
சென்னை: நடிகை நக்மா சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவின் மகள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை நக்மா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா தம்பதியின் மகள் தியா தன்னுடைய உயர்கல்விக்காக மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் சேர்ந்து இருந்தார். இதனால் ஜோதிகாவும் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகி இருந்தார். இந்த நிலையில் நேற்று தியா படித்த பள்ளியில் அவருக்கு பட்டம் அளிக்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.

பட்டம் வாங்கிய சூர்யா மகள்
சூர்யா ஜோதிகாவின் மகள் பட்டம் வாங்கிய புகைப்படங்கள் தான் நேற்றில் இருந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. தன்னுடைய மகள் குறித்து ஜோதிகா வெளியிட்ட பதிவில், "இப்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. உனது முடிவுகள் எப்போதும் உனது நம்பிக்கையை பிரதிபலித்துக் கொண்டே இருக்கட்டும், பயத்தை அல்ல. அம்மா மற்றும் அப்பாவின் வாழ்த்துக்கள் உனக்கு எப்போதும் உள்ளது தியா" என்று பதிவிட்டு இருந்தார்.
ஜோதிகா மகள் பட்டமளிப்பு விழா
அதுபோல இந்த நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா மட்டுமல்லாமல் சூர்யாவின் பெற்றோர்களான நடிகர் சிவகுமார் மற்றும் அவருடைய மனைவி, ஜோதிகாவின் பெற்றோர்கள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதுவரைக்கும் ஜோதிகாவிற்ருக்கும் அவருடைய மாமனார் சிவகுமாருக்கும் பிரச்சனை இருக்கிறது, மாமனாரோடு கருத்து வேறுபாடு காரணமாக தான் ஜோதிகா சிவக்குமார் குடும்பத்தை விட்டு பிரிந்து தன்னுடைய அம்மாவோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவி வந்த நிலையில் ஜோதிகா மற்றும் சூர்யாவின் குழந்தைகளுக்காக சிவகுமாரும் அவருடைய மனைவியும் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டதும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

நக்மாவின் தற்போதைய போட்டோ
அதே நேரத்தில் இந்த ஃபங்ஷனில் நடிகை நக்மாவும் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை நக்மா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்ததும் இது நம்ம நக்மாவா? எவ்வளவு நாளாச்சு இவரை பார்த்து என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நக்மா இப்போது உடல் எடை கூடி இருக்கிறார்.
நக்மாவின் ஹிட் திரைப்படம்
ஆனாலும் நக்மா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. நக்மா பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருடைய க்யூட்டான நடிப்பு பலருக்கும் பிடிக்கும். அதுவும் 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகளின் நக்மாவும் இருப்பார். ஆனால் திடீரென்று சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்குப் பிறகு நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் நக்மா நடித்தது பலராலும் பாராட்டப்பட்டது.

மீம்ஸ் போட்டோஸ்
சிட்டிசன் திரைப்படத்தில் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நக்மா நடித்திருந்தார் அந்த திரைப்பட காட்சிகள் இப்போது கூட அதிகமான மீம்ஸ்களில் சிட்டிசன் படத்தில் நக்மா உடைய காட்சிகள் தான் வலம் வருகிறது. இதனால் மீண்டும் இவர் சினிமாவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications