தீபக் அப்படிப்பட்டவர் இல்லை... சீரியல் நடிகை நக்ஷத்திரா போட்ட போஸ்ட்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தீபக் குறித்து சில விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தீபத்திற்கு ஆதரவாக அவரோடு சீரியலில் நடித்த நடிகை நக்ஷத்திரா போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதனாலேயே ஒவ்வொரு வருடமும் இதில் அடுத்தடுத்த சீசன் வந்து கொண்டிருக்கிறது. தற்போது எட்டாவது சீசன் விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோல மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் பிக் பாஸில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதற்குப்பிறகு ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர். அதுபோன்ற நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 65 நாட்களை தாண்டிவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடைய போகிறது.
இந்த நிலையில் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக ஒரு சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களோடு சீரியலில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்காக சிலர் பேசி வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் தீபக்கிற்கு ஆதரவாக சீரியல் நடிகை போஸ்ட் போட்டு இருக்கிறார். தீபக் விஜய் டிவியில் கடைசியாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகை நக்ஷத்திரா நடித்தார். அதுபோல நக்ஷத்திரா ஆரம்பத்தில் பெரிய அளவில் எந்த பிரச்சனைகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய கருத்தை எந்த இடத்திலும் தைரியமாக எடுத்து வைக்கிறார். சில நேரங்களில் விஜய் சேதுபதியிடம் கூட முகத்தில் அடித்தது போல இவர் பேசுகிறார். இது பற்றி சிலர் விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் தீபக் செய்வது சரி என்று அவருடைய ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.
ஆனால் கடந்த வாரத்தில் நடந்த டாஸ்க்குகளில் தீபக் ஆள் பார்த்து பழகுகிறார், பாகுபாடு காட்டுகிறார் என்றெல்லாம் அவர் மீது சிலர் விமர்சனங்கள் வைத்தனர். அது குறித்து நக்ஷத்திரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் தீபக்கை "a true gentleman" என்று நக்ஷத்திரா குறிப்பிட்டு இருக்கிறார்.
அதோடு தீபக் நேர்மையான மனிதர் எல்லோரையும் சமமாக மதிப்பவர். அவர் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார். அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர் எந்த சூழ்நிலையிலும் பாகுபாடு பார்ப்பவர் கிடையாது. பொதுவாக நான் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து சொல்வது கிடையாது. ஆனால் தீபக் பற்றி தவறாக யாரும் பேசக்கூடாது என்பதற்காக இதை சொல்கிறேன் என்று நக்ஷத்திரா கூறி இருக்கிறார்.

அதுபோல தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக அர்ஜுன் கேரக்டரில் ரயான் நடித்து வந்தார். ரயானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் ரயான் குறித்து நக்ஷத்திரா எந்த போஸ்ட்டும் போடவில்லை. தீபத்திற்கு மட்டும் தன்னுடைய சப்போர்ட் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications