நடிகை நளினிக்கும், எதிர்நீச்சல் சத்யபிரியாவிற்கும் இப்படி ஒரு பந்தமா?..நெகிழ்ச்சியான பதிவு
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சியாக நடித்துக் கொண்டிருக்கும் சத்யபிரியா நடிகை நளினியோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்துக் கொண்டிருந்த சத்திய பிரியா இப்போது சின்ன திரையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல நடிகை நளினியும் வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்து எடுத்த புகைப்படங்கள் குறித்து சத்திய பிரியா சில தகவல்களை கூறியிருக்கிறார்.

சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் படித்தான் ரசிகர்கள் அவர்களை மனதில் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் வில்லியாகவும் குணசித்திர கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கும் சத்யபிரியா பலருக்கும் பரீட்சையமானவர் தான்.
இவர் நல்லவரா கெட்டவரா என்று யோசிக்க முடியாமல் தான் இருக்கின்றது. ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த சத்யபிரியா சூரிய வம்சம் திரைப்படத்தில் தேவயானியின் அம்மாவாக நடித்தது யாராலும் மறந்து இருக்க முடியாது. சூரியவம்சம் திரைப்படம் எந்த அளவிற்கு பிரபலமானதோ அந்த அளவிற்கு நந்தினியின் அம்மா அவர் செய்த இட்லி உப்புமாவை திருட்டுத்தனமாக சாப்பிட்டு பிரபலம் அடைந்திருந்தார்.
திரைப்படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த சத்திய பிரியா சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலின் மூலம் பெரிய அளவில் சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல நடிகை நளினியும் பலருக்கும் பரிச்சயமானவர்தான் வெள்ளி திரையில் கதாநாயகியாக பல வருடங்கள் தொடர்ந்து நடித்து வந்த நளினி நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்ட பிறகு சில வருடங்கள் நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்தார். பிறகு இருவரும் விவாகரத்து செய்த பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகை நளினி இப்போ வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக சன் டிவி, விஜய் டிவி ஜீ தமிழ் என அனைத்து சேனல்களிலும் டாப் சீரியல்களில் எல்லாம் ஹெஸ்ட் ரோலாகவும் முக்கியமான கேரக்டராகவும் நடித்து வந்த நளினி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காதலும் மோதலும் ( விக்ரம் வேதா) சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை சத்யபிரியாவும் நடிகை நளினியும் சமீபத்தில் பங்க்ஷன் ஒன்றில் சந்தித்து இருக்கின்றனர். அப்போது இருவரும் புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை சத்யபிரியா சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவரின் கல்யாண வீட்டு பங்க்ஷனில் என்னுடைய நெருங்கிய நண்பர்களை சந்தித்து இருக்கிறேன் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இதற்கு பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications