மாலையும் கழுத்துமாக நடிகை நளினி.. சந்தோஷமாக மகள் வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நளினியின் மகள் அருணா வெளியிட்ட புகைப்படமும் பதிவும் தான் சோசியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது. தன்னுடைய அம்மாவை பற்றி அவர் பெருமையாக அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய அம்மாவின் பிறந்தநாள் புகைப்படங்கள், தன்னுடைய அம்மாவுடன் இதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் என பலவற்றையும் அருணா பகிர்ந்து இருக்கும் நிலையில் பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

80ஸ் காலத்தில் சினிமாவில் அறிமுகமான நளினி இப்போதைய இளம் தலைமுறைக்கும் பரீட்சயமாணவர் தான். தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தது இப்போது அம்மாவாகவும், பாட்டி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் என்னுடைய அம்மா எப்போதுமே "குயின்" தான் என்று அவருடைய மகள் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

Nalini

நடிகை நளினி மகள் பதிவு

அதோடு அம்மாவின் பிறந்தநாளுக்கு புடவையால் அபிஷேகம் செய்தது, அம்மாவை கோவிலில் மேளதாளத்துடன் அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தது என பல அழகிய தருணங்களையும் அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார். நளினி நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அந்த சமயத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நளினியும் ராமராஜனும் பிரிந்து விட்டனர்.

பிள்ளைகளுக்காக மாறிய கனவு

ஆனால் இருவரும் பிரிந்து பல வருடங்கள் ஆனாலும் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவே இல்லை. இப்போதும் என்னுடைய கணவர் ராமராஜன் தான் என்று நளினி பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அவர் விவாகரத்து கேட்டதும் நான் கொடுத்து விட்டேன் அதற்குப் பிறகு என்னுடைய குழந்தைகளின் படிப்பு செலவு முதல் அவர்களை வளர்ப்பது எல்லாவற்றையும் நான் தான் கவனித்து வந்தேன், அதற்காகத்தான் நான் மீண்டும் நடிக்க வந்தேன் என்றும் நளினி பழைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

Nalini

கல்யாணத்திற்கு முன்பு இனி நடிக்கவே கூடாது, கல்யாணம் முடிந்ததும் வீட்டில் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் எனவும் ஒரு பேட்டியில் நளினி பேசியிருந்தார். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ராமராஜனை பிரிந்ததும் மீண்டும் நடிக்க வந்து விட்டார். பழைய கதைகள் ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது நளினியின் மகன் ஆடிட்டராக இருக்கிறார். மகள் வழக்கறிஞராக இருக்கிறார்.

நெகிழ்ச்சியான சம்பவம்

குழந்தைகளை செட்டில் செய்த பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நளினிக்கு அவருடைய பிறந்தநாளை அவர் மகள் கிராண்டாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடி இருந்தார். அதனால் இந்த பிறந்த நாளை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று நளினி பதிவு வெளியிட்டிருந்தார். அவருக்கு புடவை தான் அதிகமாக பிடிக்கும் என்பதால் தான் அவருக்கு புடவையாலேயே அபிஷேகத்தையே செய்திருந்தார்கள். இப்போது நளினியை போலவே இருக்கும் அவருடைய மகள் அம்மாவுக்கு வாழ்த்து சொல்லி பதிவு வெளியிட்டதும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+