அப்பாவும், அண்ணனும் செய்த செயல்.. நடிகை "நளினி” வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? துணை நின்ற ஒரே உறவு!
சென்னை: வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்த நடிகை தற்போது சின்ன திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மோதலும் காதலும்" என்ற சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை நளினி பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப காலம் மற்றும் தன்னுடைய அப்பா அண்ணன்கள் தன்னுடைய வாழ்க்கையில் செய்த செயல் பற்றி பல தகவல்களை மனம் விட்டு பேசி இருக்கிறார்.
வெள்ளிதிரையில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக ஜொலித்தவர்கள் அங்கே வாய்ப்பு கொஞ்சம் குறைய தொடங்கியதும் சீரியல் நோக்கி படையெடுக்க தொடங்குவது வாடிக்கையானது தான். அந்த மாதிரி தான் பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நடிகை நளினி சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். ஆனால் சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு அமோகமாக அமைந்தது.
"சின்ன பாப்பா பெரிய பாப்பா" போன்ற பல சீரியல்களில் நடிகை நளினிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்கள் அமைந்தது. அது போல வெள்ளித்திரையைப் போலவே இவருக்கு சின்ன திரையிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட நடிகை நளினி "மோதலும் காதலும்" இந்த சீரியலில் காமெடியான கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகியிடம் மட்டும் இவர் கறாராக நடந்து கொள்ளும் இடங்களில் பலருடைய கோபத்தை சம்பாதித்துக் கொண்டாலும் தன்னுடைய மகன் மற்றும் பேத்தி மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவர் அசத்தி விடுகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார்.
சினிமாவில் டி. ராஜேந்திரன் இயக்கத்தில் "உயிர் உள்ளவரை உஷா" என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை நளினி அறிமுகமாகி இருந்தார். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்னர் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜயகாந்த் மாதிரியான பெரிய நடிகர்களோடும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து நடிகை நளினி புகழில் உச்சத்தில் இருக்கும் போது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் ராமராஜனை பிரிந்த பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தான் நடிக்கிறேன் என்று சொன்னதும் தன்னுடைய சொந்த வீட்டிலே பெரிய அளவில் எதிர்ப்புத் கிளம்பியது என்று பேட்டியில் நளினி பேசி இருக்கிறார்.
இவர் நடிக்க தொடங்குகிறார் என்று செய்தி தெரிந்ததும் இவருடைய அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அது பிடிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு போக போகிறோம் என்று மிரட்டினார்களாம். ஆனால் நளினி தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அவருடைய அப்பாவும் அண்ணனும் வீட்டை விட்டே கோபித்து கிளம்பி விட்டார்களாம். அந்த நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தது தன்னுடைய அம்மா மட்டும்தான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications