சின்னத்திரையில் கம்பேக் கொடுக்கும் நடிகை நமீதா.. என்ன இப்படி மாறிட்டாங்க.. அதுவும் எந்த நிகழ்ச்சி தெரியுமா?
சென்னை: நடிகை நமீதா ஏற்கனவே மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். ஆனால் சில வருடங்களாக இப்போது சின்னதிரையை விட்டு விலகி இருந்த நமீதா மீண்டும் சின்னத்திரைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். அதுவும் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தான் அவர் இப்போது கம் பேக் கொடுத்து இருக்கிறார்.
நம்முடைய தமிழை எத்தனையோ பேர் விதவிதமாக பேசி கேட்டு இருப்போம். வெளிநாட்டினர்களோ, வெளிமாநிலத்தவர்களோ அவர்கள் தமிழை ஒவ்வொரு வித்தியாசத்திலும் பேசும் போது அது மக்கள் மத்தியில் கவரப்படும். அந்த மாதிரி தான் நடிகை நமீதா தன்னுடைய செல்லமான பேச்சால் ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார்.

அதிலும் "ஹாய் மச்சான்ஸ்" என்று இவர் பேசும் பேச்சை கேட்டு இவருக்கு 90ஸ் கிட்ஸ்கள் பலர் ஃபயர் விட்டுக் கொண்டிருந்தனர். நமீதாவை தவிர யாரும் அவருடைய ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என்று அழைத்தது கிடையாது. அதனாலேயே அது நமீதாவிற்கே உரிய வித்தியாசமான ஸ்டைலாக மாறி இருந்தது. நடிகை நமீதா எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதற்குப் பிறகு அழகிய தமிழ் மகன், பில்லா, ஏய் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று உடல் எடை கூடி விட்டார். அதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டது. அந்த நேரத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாடா மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை பிரபலமாக்கி இருந்தார்.
அதற்குப் பிறகுதான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 28 நாட்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி நமீதா வெளியே வந்திருந்தார். அதற்குப் பிறகும் பெரிய அளவில் நமீதாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை.

அந்த நேரத்தில் தான் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்திருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்த நிலையில் தன்னுடைய குழந்தைகளை கவனித்து வந்த நமீதா இப்போது அரசியலிலும் இறங்கி இருக்கிறார். அடிக்கடி இவர் மேடையில் பேசும் வார்த்தைகள் இணையத்தை ரணகள படுத்தி கொண்டிருக்கும். இந்த நிலையில் மீண்டும் இவர் சின்ன திரையில் கம் பேக் கொடுத்து இருக்கிறார்.
அதாவது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நமீதாவும் நடுவராக இணைந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகை சினேகா, சங்கீதா மற்றும் பாபா மாஸ்டர் மூன்று பேரும் நடுவர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பாபா மாஸ்டருக்கு பதிலாக நமீதா நடுவராக மாறி இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் மீண்டும் உடல் எடையை குறைத்து நமீதா புடவையில் சமீபத்தில் instagram பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications