Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகளோடு நயன்தாரா வெளியிட்ட பதிவு.. அசல் கோளாறுவின் “அந்த” கமெண்ட்..திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

அதைத் தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதற்கு பிறகு தான் இவர்தான் அந்த பாடலை பாடியவர் என்பது கூட பலருக்கும் தெரிந்தது.

actress Nayanthara fans slameed bigg boss asal kolar commends

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா தன்னுடைய குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு அசல் கோளாறு கொடுத்த கமெண்ட் சமூக வலைதளத்தில் பலருடைய திட்டல்களையும் வாங்கி வருகிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து இருக்கிறது. இதில் கலந்துகொண்டால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விடலாம் என்று பல பிரபலங்கள் போட்டி போட்டு கலந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சி வேண்டவே வேண்டாம் என்று ஓடி ஒளிந்து விடுகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கடத்த சீசனில் அறிமுகமானவர்தான் அசல் கோளாறு.

ஆரம்பமான அன்று கமல் முன்பு ஜோர்த்தால என்ற பாடலை பாடி பலரையும் மிரள வைத்திருந்தார். இந்த பாடல் அந்த நேரத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. அந்த பாடலை பாடியவர் இவர்தான் என்பது அந்த நேரத்தில் தான் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் சென்றிருந்த ஒரு சில நாட்களிலே அதிகமாக பெண் போட்டியாளர்களுடனே இவர் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்ததும், அவர்களை தொட்டு உரசி விளையாடிக் கொண்டிருந்ததும் 24 மணி நேர ஹாட்ஸ்டாரில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி அந்த வீடியோக்களை ட்ரெண்டு செய்து அசல் கோளாறுவை கலாய்த்து எடுத்து வந்தனர்.

பெண்களின் கால்களில் கோலம் போட்டுக் கொண்டு, முதுகில் கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அசோக் கோளாறு கிளிப்சுகளை இணையத்தில் வேகமாக பரவி வந்தது. அதனாலேயே எலிமினேஷனில் ஒரு சில வாரங்களில் இவர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். அப்போது கூட நடிகர் கமல் நீங்கள் வெளியே போய் பார்த்தால் தெரியும் நீங்கள் எதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியே போகிறீர்கள் என்பது என்று உள்குத்தோடு பேசி இருந்தார்.

இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அசல் கோளாறு நான் எந்த தவறான அர்த்தத்திலுயும் பெண்களிடம் பழகவில்லை. எங்கள் வீட்டில் என்னோட சக உறவினர்களோடு எப்படி பழகுவேனோ அப்படித்தான் அந்த நிகழ்ச்சியிலும் நான் இருந்தேன். ஆனால் அது வெளியில் இருந்து பார்க்கும்போது தவறாக இருக்கிறது. இனி என்னுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்வேன் என்று விளக்கமும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் instagramயில் புதிய கணக்கை தொடங்கிய நடிகை நயன்தாரா தன்னுடைய குழந்தைகளோடு எடுத்த ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு அசல் கோளாறு ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அது தவறான அர்த்தத்தில் இருப்பதாக அதிகமான ரசிகர்கள் அசல் கோளாறுவை திட்டி வருகின்றனர்.

அதாவது அந்த வீடியோவிற்கு அசல் கோளாறு "I wish those kids knows who's there mom soon" என கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதற்கு நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு சீக்கிரமே அவங்க அம்மா யாருன்னு தெரிய வரும் என்று இவர் சொன்னதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம் நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று இருப்பதால் அது குறித்து தான் இப்படி ஒரு கமெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றும் கேள்விகள் வலம் வருகிறது.

இந்த நிலையில், நயன்தாராவின் ரசிகர் ஒருவர் அசல் கோளாறு கொடுத்த கமெண்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, ஒரு பாட்டு பாடிட்டானாமா... நயன்தாரா வெளியிட்ட ரீன்ஸில் எவ்வளவு தற்குறித்தனமா ஒரு கமெண்ட் என திட்டி வருகிறார்கள்.

ஆனால் அசல் கோளாறு நடிகை நயன்தாரா பற்றி தவறான அர்த்தத்தில் அந்த கமெண்ட் போடவில்லை என்றும், அவர் சொல்ல வந்ததே வேறு அந்த குழந்தைகள் பெரியதாக ஆனதும் தங்கள் அம்மா நயன்தாரா எவ்வளவு பெரிய ஆள் என்பதை புரிந்து கொள்வார்கள் என்ற அர்த்தத்தில் தான் அந்த கமெண்ட் போட்டு உள்ளார் என்றும் சிலர் அதற்கு விளக்கமும் கொடுத்து வருகின்றனர். இப்படியாக அசோக் கோளாறு கொடுத்த கமெண்ட் வைத்து இப்போது இணையத்தில் கருத்து மோதல்கள் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+