தேவயானி உடன் நீலிமா வெளியிட்ட புகைப்படம்.. திடீர் போஸ்ட்க்கு காரணம் இதுதானா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை தேவயானியை சந்தித்த நடிகை நீலிமா அவருடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இருவரும் கோலங்கள் சீரியலில் சில வருடங்களுக்கு முன்பு நடித்திருந்த நிலையில் இப்போது மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்களாம். அது குறித்து சில அப்டேட் நீலிமா கொடுத்திருக்கிறார், அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் உச்சகட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட் குறைய தொடங்கியதும் சின்னத்திரையை நோக்கி அடி எடுத்து வைத்து விடுகிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் தான் சின்னத்திரையிலும் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை தேவயானி.

தேவயானிக்கு காதல் கோட்டை திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ச்சியாக அவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை கொடுத்து விட்டது. அதிலும் ஹோமிலியான லுக்கில் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்று தேவயானி ரசிகர்களை கவர்ந்து விட்டார். கமல்ஹாசன், அஜித், விஜய், சரத்குமார், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களோடும் தேவயானி ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தேவயானி சின்னத்திரையை நோக்கி அடி எடுத்து வைத்தார். அதிலும் அவர் நடித்த கோலங்கள் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களை இப்ப வரைக்கும் அந்த சீரியல் குறித்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இரண்டாவது சீசன் எப்போது வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் கோலங்கள் சீரியலில் தேவயானி உடன் நடித்த நடிகை நீலிமா தற்போது அவரை மீண்டும் சந்தித்து இருக்கும் நிலையில் அவரோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீலிமா இசை திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சீரியலை இயக்கியும் இருக்கிறார். சமீபத்தில் கூட சன் டிவியில் வானத்தைப்போல சீரியலில் புது என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் நீலிமா மற்றும் தேவயானி இருவரும் புது திரைப்படத்தில் நடித்து வருவதாக நீலிமா தன்னுடைய மகிழ்ச்சியை மக்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் அதியமான் இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்காக டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வருடங்கள் கழித்து இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்ததால் ரசிகர்கள் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நீங்கள் மீண்டும் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இருவரும் இருக்கிற புகைப்படத்தை கூகுளில் தேடினேன் அங்கு கிடைக்கவில்லை ஆனால் உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிடைத்துவிட்டது என்று கூறி வருகிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications