நடிகை திரிஷாவை பார்த்தாலே அப்படித்தான்..! பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை நீலிமா
சென்னை: இளைஞர்கள் பலருடைய கிரஷ் ஆக இருக்கும் திரிஷா தனக்கு எப்படி என்பது பற்றி நடிகை நீலிமா பேசிய வீடியோ தற்போது பரவி வருகிறது.
நடிகை திரிஷாவை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது என்று நடிகை நீலிமா மகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.
அதோடு எனக்கு எப்போதுமே நடிகை சிம்ரன் தான் ரொம்பவே பிடிக்கும் என்றும் அதற்கான காரணம் பற்றியும் கூறி இருக்கிறார்.

பல நடிகைகள் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி அங்கே வாய்ப்பு குறைய தொடங்கியதும் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்து விடுவார்கள். ஆனால் நடிகை நீலிமா அப்படி கிடையாது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டையும் ஒரே நேரத்தில் கலக்கி கொண்டு இருந்த இவர் தற்போது நடிகை திரிஷா மற்றும் சிம்ரன் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வேற லெவலில் தன்னுடைய அழகை மெருகேற்றி பலரையும் வியக்க வைத்திருக்கிறார். வயது ஆக ஆக இவருடைய இளமையும், அழகும் கூடிக் கொண்டே போவதை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போய் இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு நடிகையாக இருந்தாலும் நானும் அப்படித்தான் என்று நடிகை நீலிமா கூறி இருக்கிறார்.
நான் இப்போது திரிஷாவை பார்த்தால் ஷ்ஷ்.. என்று வியக்க தோன்றும். அந்த அளவிற்கு அவரைப் பார்த்தால் வியந்து போய் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பல ஆண்கள் தான் திரிஷாவை பார்த்து சொக்கிப் போய் இருக்கிறார்கள் என்றால் ஒரு நடிகையும் இப்படியா என்று பலர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் அந்த வீடியோவில் நான் 90 ஸ் கிட்ஸ் என்பதால் எனக்கு அப்போ இருந்தே சிம்ரனை ரொம்பவே பிடிக்கும். இப்போதும் எனக்கு சிம்ரனை ரொம்பவும் பிடிக்கும் ஆனாலும் திரிஷாவையும் எனக்கு பிடித்திருக்கிறது. அவருடைய செகண்ட் இன்னிங்ஸ் பலருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கும் வகையில் இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்.
அதோடு என்னை பார்க்கும் பலரும் இவர் திமிரு பிடித்தவர் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் என்னுடைய முகம் தான். நான் சும்மா சாதாரணமாக உட்கார்ந்து புக் படித்துக் கொண்டிருந்தாலும் கூட, பார்ப்பவர்கள் பாருங்களேன் இவங்க எப்படி இருக்காங்க என்று கூறுவார்கள். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நான் ஜாலி டைப் தான். எப்போதும் கலகலவென பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் பார்ப்பவர்கள் பல பேருக்கு அது தெரிவதில்லை என்று நீலிமா கூறியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications