7 வருடத்திற்கு பிறகு அதே விஷயம் நடந்திருக்கு.. என்னால மறக்க முடியல! எமோஷனலாக பேசிய நடிகை நீலிமா
சென்னை: நடிகை நீலிமா ராணி தான் வாணி ராணி சீரியல் நடித்த போது இருந்த சூட்டிங் வீட்டிற்கு ஏழு வருடம் கழித்து மீண்டும் வந்திருந்த நிலையில் அந்த வீடு பற்றிய நினைவுகளை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை நீலிமா ராணி கமல்ஹாசன் நடித்து பெரிய அளவில் ஹிட் அடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அதற்கு பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் டும் டும் டும் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு துணை கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தார்.

அது மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களிலும் நடித்திருந்தார். இதுவரைக்கும் 15 மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நீலிமா நடித்திருக்கிறார். அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, ஜீ தமிழில் தலையணை பூக்கள் போன்ற சீரியல்களில் நடித்தும் இருந்தார்.
அதுபோல நடிகை ராதிகா நடித்த வாணி ராணி சீரியலிலும் நீலிமா டிம்பிள் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் இப்போது பல வருடங்கள் கழித்து சன் டிவியில் வானத்தைப்போல சீரியல் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய instagram பக்கத்தில் நீலிமா ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் அதில், வாணி ராணி சீரியலில் நடிக்கும் போது டிம்பிள் வீட்டை இப்போது பார்த்தபோது என்னால் அந்த உற்சாகத்தை அடக்க முடியவில்லை.
நாங்கள் அனைவரும் இந்த வீட்டில் சைக்கிள் ஓட்டி விளையாடி இருக்கிறோம். இந்த வீட்டில் நாங்கள் பல வருடங்களாக ஒன்றாக சுற்றி திரிந்திருக்கிறோம். இது படப்பிடிப்பு வீடாக இருந்தாலும் ஒவ்வொரு செங்கலுக்கும் என்னோடு தொடர்புண்டு. தூணில் சாய்ந்திருக்கிறேன், தரையில் அமர்ந்து அழுது இருக்கிறேன். அந்த கூரையின் கீழ் ஒன்றாக நாங்களும் எல்லோரும் வாழ்ந்தோம்.
பல நினைவுகளை இந்த வீடு எனக்கு ரீவைண்ட் செய்து இருக்கிறது. வீட்டை பார்த்ததும் பல ஏக்கமான உணர்வுகள் எனக்குள் வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்த வீடு பல சீரியல்களில் காட்டப்பட்டிருந்தாலும் நீலிமா இன்று தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கும் நிலையில் ரசிகர்களும் இந்த வீடு பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications