யாரும் கூட வர மாட்டாங்க..இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! வருத்தத்தை பகிர்ந்த நீலிமா..காரணம் இதுதானா
சென்னை: முன்னணி நடிகையான நீலிமா சமீபத்தில் தன்னுடைய கணவர் குறித்து சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செய்திகளுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் சோகத்தில் இருப்பவர்களுக்கு நீலிமா சூப்பர் அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.
என்னதான் இருந்தாலும் யாரும் உங்களோடு கடைசி வரைக்கும் வரப்போவதில்லை உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நீலிமா கூறி இருக்கிறார்.

சீக்கிரமே திருமணம்: சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி கொண்டிருந்த நீலிமா தற்போது வெள்ளித் துறையில் 1947 என்ற திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார். அதில் தன்னுடைய தனக்கு 21 வயதில் திருமணம் முடிந்துவிட்டது என்றும் தன்னுடைய கணவருக்கு அப்போதே வயது அதிகமாக இருந்ததால் தான் வெளியே செல்லும்போதெல்லாம் பல தன்னை கலாய்த்து கொண்டிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.
காதலை சொன்னது: நீலிமாவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நீலிமா அவருடைய கணவரை காதலித்து தான் திருமணம் செய்து இருக்கிறார் அப்போவே இவருக்கும் இவருடைய கணவருக்கும் 12 வயது வித்தியாசத்தில் இருந்திருக்கின்றது. அவருடைய கணவர் ஒரு தமிழர் ஆனால் நீலிமா ஒரு தெலுங்கு, இவர்களுடைய வாழ்க்கையில் முதன் முதலில் காதலை சொன்னது நீலிமா தானாம்.
குழந்தை விஷயத்தில் கண்டிஷன்: ஆரம்பத்தில் இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை சொல்லி மறுத்த அவருடைய கணவர் பின்பு அவரும் காதலிக்க தொடங்கி விட்டாராம். திருமணம் மட்டுமல்லாமல் குழந்தை விஷயத்திலும் நீலிமாவிற்கு விரும்பியபடி தான் நடந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவருடைய தந்தை இறந்து விட்டதால் இவருடைய தம்பி அப்போ ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தாராம். இதனால் தான் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்து விட்ட பிறகுதான் நமக்கு குழந்தை என்று கூறியிருக்கிறார்.

தப்பான கேள்வி: உடனே அவருடைய கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாராம். அதற்கு பிறகு தம்பி கல்லூரி படித்து முடித்த பிறகு 9 வருடம் கழித்து இவர் முதல் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் நீலிமாவிற்கு இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது. இந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதிகப்படியான புகைப்படங்களை எடுத்து குவித்து இருந்தார். அப்போது அதிகமானோர் இது யாரு உங்க அப்பாவா அல்லது தாத்தாவா என்று கேட்பார்களாம். அப்போது கடுப்பாக இருக்கும் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று தோன்றும் என்று ஒரு முறை தனக்கு வந்த ஸ்க்ரீன்ஷாட் எல்லாம் எடுத்து வைத்து நீலிமா அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார்.
எப்போதும் தனிமை தான்:இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் யாரோடும் எல்லாராலயும் தொடர்ந்து கூடவே வர முடியாது. எப்போதும் நீங்கள் மட்டும்தான் உங்களுக்கு தனித்துவம். அதனால் உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் நீங்களே பேசிக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே அங்கீகாரம் கொடுத்து பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் உங்களால் இந்த உலகத்தில் நிலை நாட்ட முடியும். யார் மீதும் பாசம் இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து எப்போதும் நம்மோடு வர முடியாது என்று நீலிமா கூறிய கருத்துக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications