பாக்கியலட்சுமி இனியா முகத்தில் என்னது? ட்ரோல்களுக்கு மத்தியில் நடந்த சம்பவம்! நடிகை வெளியிட்ட போட்டோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடிகை நேகா நடித்து வருகிறார். இவருடைய புகைப்படங்களை அந்த சீரியலில் நடிக்கும் கம்பம் மீனா பகிர்ந்து இருக்கும் நிலையில் அது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.

பொதுவாக சீரியல்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் ஆரம்ப காலகட்டத்தில் பார்த்து வந்தார்கள். ஆனால் இப்போது இணையத்தின் பயன்பாடு காரணமாக எல்லா இடத்திலும் நினைத்தபோது சீரியல் பார்ப்பதால் ஆண்களும் சீரியல் பார்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சிலர் சீரியலை விரும்பி பார்க்கவில்லை என்றாலும் ட்ரோல் செய்வதற்காகவே பார்க்கிறார்கள்.

baakiyalakshmi serial vijay tv

சீரியல்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள் ஆனால் சில சீரியல்களில் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் கதையை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அது மீம்ஸ் கிரியேட்டர்களில் கையில் சிக்கிவிட்டால் சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகிறது. இதுபோன்று நெகட்டிவாக வைரல் ஆகுவது கூட சீரியலுக்கு ப்ரமோஷன் தான். அதனால் சீரியல் தரப்பினர்கள் இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிக்கோங்க என்று கதையை நெட்டிசன்கள் கலாய்ப்பது போன்றே மாற்றி விடுகிறார்கள்.

அதுபோலத்தான் தற்போது பாக்கியலட்சுமி சீரியலும் அடிக்கடி இணையத்தில் ட்ரோல் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல சம்பவங்கள் கதையாக கொண்டு வருகிறார்கள். அதிலும் அமிர்தாவின் முதல் கணவர் இறந்து போய்விட்டதாக சில வருடங்களுக்கு முன்பு கதை கொண்டு போய்விட்டு அதற்குப் பிறகு அவர் மீண்டும் உயிரோடு வந்தது போன்று கதையை வைத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர்.

baakiyalakshmi serial vijay tv

அது போல தன்னுடைய கணவர் தன்னை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய பெஸ்ட் பிரண்டையே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாலும் இந்த சீரியல் கதாநாயகி பாக்யா தியாகியாக மாறி தன்னுடைய தோழியையும் கணவரையும் சேர்த்து வைப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு மத்தியில் இந்த சீரியலில் இனியாவின் டான்ஸ் காம்படிஷனில் நடந்த கூத்து இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இனியாவாக நடிக்கும் நேகாவிற்க்கு நேற்று பிறந்த நாள். அவருடைய பிறந்தநாளுக்கு பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் எல்லோருமே வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

baakiyalakshmi serial vijay tv

அதோடு நேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவருடைய முகத்தில் கேக் தடவி எடுத்த புகைப்படத்தை பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாக நடிக்கும் நடிகை கம்பம் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

baakiyalakshmi serial vijay tv

அதுபோல சிலர் இந்த புகைப்படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமான நேகா இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+