கரகாட்டக்காரன், 16 வயதினிலே படத்தில் நடிக்க மறுத்த காரணம் இதுதான்.. நடிகை நிரோஷா ஓப்பன் அப்
சென்னை: முன்னணி நடிகையாக வெள்ளித் திரையில் பல நடிகர்களோடு நடித்திருந்த நடிகை நிரோஷா இப்போது சின்னத்திரையிலும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்த நிரோஷா இப்போது பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு கரகாட்டக்காரன் திரைப்படம் மற்றும் 16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் தான் அதில் எதற்காக நடிக்கவில்லை என்பது பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை நிரோஷா நடிகர் கமல்ஹாசன், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்கள் பலரோடு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னால் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது அதற்கு காரணம் இதுதான் என்று பல வருடங்கள் கழித்து ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.
நடிகை நிரோஷா வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக இருந்து அவரோடு நடித்த நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். புகழின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து விட்டதால் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை இப்போது தொடங்கி இருக்கிறார்.
நடிகை நிரோஷா ராதிகாவின் தங்கையாக இருந்தாலும் திரை துறையில் தன்னுடைய அனுபவத்தின் காரணமாகவே திரைப்படங்களில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இப்போது கொடி கட்டி பறந்து வருகிறார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் இவருடைய காமெடியான நடிப்பு 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் என்று தான் சொல்ல வேண்டும்.
அதை தொடர்ந்து தான் பிரியமான தோழி என்ற திரைப்படத்திலும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். அதிலும் தன்னுடைய காமெடியால் கலக்கி இருப்பார். இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கோமதி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் இன்று வெளியான லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினியின் மனைவியாக நிரோஷா நடித்திருக்கிறார்.
அது பற்றி பெருமையாக பேட்டிகளில் பேசியிருக்கிறார். தான் வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக நடிக்கும் போது ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று தான் பலமுறை நினைத்திருந்ததாகவும் அது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் நிறைவேறி இருக்கிறது என்று சந்தோஷத்தை வெளிக்காட்டி இருந்தார்.
அதுபோல தனக்கு கரகாட்டக்காரன் திரைப்படம் மற்றும் 16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் வேறு திரைப்படத்தில் சூட்டிங்கில் பிஸியாக இருந்ததால்தான் அந்த திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கங்கை அமரன் சார் என்னிடம் நீ ஒரே ஒரு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போ என்று கூட சொன்னார்.
ஆனால் நான் அந்த நேரத்தில் இணைந்த கைகள் திரைப்படத்தில் பிஸியாக நடித்ததால் இங்கு நடிக்க முடியாமல் ஆகிவிட்டது. இந்த இரண்டு திரைப்படங்களில் நான் நடித்திருந்தால் என்னுடைய கேரக்டர் இன்னும் வேறு மாதிரி மக்களை கவர்ந்திருக்கும் என்று அந்த பேட்டியில் நிரோஷா பேசியிருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications