என்னையும் ராம்கியையும் பிரிப்பதற்காக ராதிகா செய்த செயல்..! அதுவும் அப்படி! எமோஷனலாக பேசிய நிரோஷா
சென்னை: நடிகை நிரோஷா தனக்கும் தன்னுடைய கணவர் ராம்கிக்கும் இடையிலான காதல் கதை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதோடு தன்னுடைய காதல் வீட்டில் தெரிந்ததும் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பற்றியும் அப்போது நடிகை ராதிகா செய்த செயல் குறித்தும் நிரோஷா எமோஷனலாக பேசியிருக்கிறார்.
அதாவது செந்தூரப்பூவே சீரியல் திரைப்படத்தில் நடிக்கும் போது ராம்கியை தான் காதலித்து வந்தது பற்றியும் அதற்குப்பிறகு அந்த விஷயங்கள் வீட்டில் தெரிந்ததும் இணைந்த கைகள் திரைப்படத்தில் தான் நடிக்கும் போது ராதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து செய்த செயல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து நிரோஷா பேசியிருக்கிறார்.

அதில் நடிகை நிரோஷா தனக்கும் தன்னுடைய கணவர் ராம்கிக்கும் இடையிலான காதல் கதை குறித்து பகிர்ந்து இருக்கிறார் அதில் என்னுடைய கணவருக்கு நான் இதுவரைக்கும் ஐ லவ் யூ சொன்னதே கிடையாது. தொடக்க காலத்தில் நடிக்கும்போது சண்டை மட்டும்தான் எங்களுக்குள் இருந்தது. நாங்கள் எப்போதும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு இருப்போம். நடிக்கும் போது அவர் என்னை தொட்டு நடிக்கும் போதெல்லாம் நான் அவரிடம் நீங்க நடிக்கும் போது என்னை தொடுறதுக்கு என்கிட்ட அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் கூட நடிச்சிருக்கிறேன்.
ஆனால் அவர் கூட என்னை தொடுவதற்கு முன்பு என்னிடம் அனுமதி கேட்பார் ஆனால் நீங்கள் யாருங்க என்று நான் அவரிடம் திமிராக பேசியிருக்கிறேன். அதற்கு ராம்கி, உன் படம் வரப்போகுது நாங்க தியேட்டர்ல போய் கத்துவோம். அந்த படம் ஊத்திக்க போகுது என்று சார்லியும் ராம்கியும் கிண்டல் பண்ணுவாங்க. அப்போதெல்லாம் ராம்கி எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. பிறகு ஒரு முறை செந்தூரப்பூவே திரைப்படத்திற்காக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு நீர்வீழ்ச்சியில் நான் மூழ்கி விட்டேன்.
அது எனக்கு மிகப்பெரிய விபத்து. அதில் நான் பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் செத்துதான் பிழைத்தேன். அந்த விபத்து நடந்து ஒரு சில நாட்களில் அடுத்ததாக எனக்கு ஒரு ரயில் விபத்தும் ஏற்பட்டது. அந்த விபத்தில் என்னை ராம்கி தான் காப்பாற்றினார். அவர் மட்டும் அப்போ காப்பாற்றலனா என்னுடைய விலா எலும்பெல்லாம் நொறுங்கிப் போய் இருக்கும். எனக்கு அடிபட்டதும் எல்லோரும் என்னை ஹாஸ்பிடலுக்கு தூக்கி கொண்டு போய்க் கொண்டிருக்கும் போது கூட ராம்கி "கவலைப்படாத நான் இருக்கேன்னு" சொன்னார்.
அதற்கு பிறகு தான் நான் அவரை விரும்பினேன். அதற்குப் பிறகு எங்களுடைய காதல் வீட்டுக்கு தெரிய ஆரம்பிச்சது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சினிமா துறையை சேர்ந்தவர்களா இருப்பதால் சினிமா துறையில் இருக்கிறவர்களை காதலிக்கக் கூடாதுன்னு உறுதியாகவும் கண்டிப்பாக சொல்லி இருந்தார்கள். அப்போ நான் ராம்கி இடம் வீட்டில் போனில் பேசி மாட்டி அடி எல்லாம் வாங்கி இருக்கிறேன்.
அதற்குப் பிறகு நானும் ராம்கியும் சேர்ந்து நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் வெற்றி படங்களை ஜோடியாக கொடுத்துக் கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் பிரபலங்களாக இருந்தோம். அந்த நேரத்தில் தான் இணைந்த கைகள் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நான் தான் ராம்கிக்கு ஜோடி. ஆனால் படத்தின் பூஜை முடிந்ததும் அங்கே எங்க அக்கா ராதிகா வந்து நான் இந்த படத்தில் நடிக்க கூடாதுன்னு பிரச்சனை பண்ணிட்டாங்க. அதனால்தான் அருண் பாண்டியனுக்கு ஜோடியாக என்னை மாத்திட்டாங்க என்று அந்த பேட்டியில் நடிகை நிரோஷா பேசியிருக்கிறார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications