நயன்தாரா ரூட்டில் தனுஷ் பட நடிகை நிவேதிதா சதீஷ்.. வைரலாகும் எங்கேஜ்மென்ட்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: சினிமாவில் சில நடிகைகளின் காதல் வாழ்க்கை படத்தையே மிஞ்சும் அளவுக்கு சுவாரசியமாக இருக்கும். அதுவும் காதல் விஷயத்தை வெளியில் காட்டாமல் சரியான நேரத்தில் ஒரு புகைப்படத்துடன் அறிவிப்பது தனி ஸ்டைல். அந்த லிஸ்டில் நயன்தாரா, ரேஷ்மிகா மந்தனா வரிசையில் இப்போது நடிகை நிவேதிதா சதீஷும் சேர்ந்திருக்கிறார்.
மகளிர் மட்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதிதா சதீஷ் தற்போது தனது நீண்ட நாள் காதலரான சுஹைப் முகமதுவை திருமணம் செய்ய இருக்கிறார். இருவரின் நிச்சயதார்த்த போட்டோக்களை நிவேதிதா தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இநத புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
நயன்தாரா மாதிரி சைலன்ட் லவ்
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தின் சூட்டிங் போது தான் காதலிக்க ஆரம்பித்தனர். பல ஆண்டுகளாக தங்களுடைய காதலை மிகவும் தனிப்பட்டமான விஷயமாக வைத்திருந்தனர். இருவரைப் பற்றி ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் அப்போது இருவருமே ஆமாம் என்று ஒரு வார்த்தை சொல்லாமலே இருந்தனர். கடந்த 2021 நிச்சயதார்த்தம் நடந்ததையே நயன்தாராவே ஒரு பேட்டியில் உறுதி செய்த அதற்கு பிறகு தான் திருமணம் பற்றிய விஷயங்கள் வெளிப்படையாக பேசப்பட்டன.
அதே மாதிரி நடிகை நிவேதிதா சதீஷும் தனது காதல் வாழ்க்கையை சினிமா செய்திகளுக்குள் நடுவில் பெரிதாக கொண்டுவராமல் இருந்த நிலையில் இப்போது நேரடியாக எங்கேஜ்மென்ட் புகைப்படங்களுடன் வந்திருக்கிறார். அதனால் தான் ரசிகர்களுக்கு இது இன்னும் ஸ்பெஷல்.

சினிமா ஆரம்பம்
கடந்த 2017 ஆம் ஆண்டு மகளிர் மட்டும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதிதா அதே வருஷம் அகில் அக்கினேனி உடன் ஹலோ படத்தில் மூலமாக தெலுங்கில் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது ஹலிதா இயக்கிய சில்லு கருப்பட்டி படம் தான். அதில் மணிகண்டன் உடன் இணைந்து நடித்த நிவேதிதாவின் கதாபாத்திரம் ஜாலியாகவும் அதே நேரத்தில் அவருடைய நடிப்பு ஸ்ட்ராங்காகவும் இருந்தது.
நிவேதிதா நடித்த படங்கள்
அந்த படம் வெளியான பிறகு இந்த நடிகை இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் உருவானது. அதற்குப் பிறகு செத்தும் ஆயிரம் பொன், உடன்பிறப்பே, தனுஷ் உடன் கேப்டன் மில்லர் என ஒவ்வொரு படத்தின் கதையிலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி வந்தார். சமீபத்தில் வெளியான ஓ பட்டர்பிளை படமும் அவரது பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

கணவர் யார்
இப்போது நிவேதிதா உடன் என்கேஜ்மென்ட் போட்டோவில் இருப்பது சுஹைப் முகமது. இவர் புகைப்பட கலைஞராக இருப்பதுடன் சினிமா துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும் தற்போது அந்த காதல் திருமணத்தை நோக்கி குடும்பத்தினர் சம்பந்தத்துடன் நகர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திருமண தேதி குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் சில்லு கருப்பட்டி நிவேதிதா வாழ்க்கையிலும் இப்போது புதிய அத்தியாயம் ஆரம்பமாகி விட்டது.


Click it and Unblock the Notifications
