சன் டிவி சீரியலில் கதாநாயகியாகும் அயலி பட நடிகை.. ஹீரோ சின்னத்திரை விஜய் சேதுபதி தான்
சென்னை: சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் கதாநாயகியாக நடிகை அபி நட்சத்திரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அபி நட்சத்திரா அயலி வெப் சீரிஸ் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அதுபோல பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் பெண்மணிகள் தான் சீரியல்களை ஆரம்ப காலகட்டத்தில் விரும்பி பார்ப்பார்கள் ஆனால் இப்போது இணையத்தின் பயன்பாடு காரணமாக எந்த இடத்திலும் சீரியலை பார்க்கலாம் என்பதற்காக பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சீரியல்களை பார்க்கிறார்கள். அதிலும் சிலர் சீரியலில் கதையை ஓட்டுவதற்காகவும் ட்ரோல் செய்வதற்காகவும் பார்க்கிறார்கள்.

ஆரம்பத்தில் சன் டிவியில் தான் அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது. இப்போது அதற்கு போட்டியாக விஜய் டிவியிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பல சீரியல்கள் புதியது புதியதாக தொடங்கப்பட்டது. பொதுவாக சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பிக்காக பல போட்டிகள் இருக்கும். அதில் டாப் 10 இடங்களில் அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடித்திருக்கும்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்க பெண்ணே போன்ற சீரியல்கள் முன்னணி இடத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தொடங்கப்பட்ட மூன்று முடிச்சு, மருமகள், மல்லி போன்ற சீரியல்களும் முன்னணி இடங்களை பிடித்திருக்கிறது. அந்த வரிசையில் விரைவில் சன் டிவியில் புது சீரியல் ஒன்று தொடங்க இருக்கிறது. அந்த சீரியலில் கதாநாயகியாக அயலி வெப் சீரிஸ் மூலம் பிரபலம் அடைந்த நடிகை அபி நட்சத்திரா நடிக்க இருக்கிறார்.
அபி நட்சத்திராவிற்கு ஜோடியாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் நடிகர் பரத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பரத் சின்னத்திரை விஜய் சேதுபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நிலையில் அவர் தற்போது சன் டிவி சீரியல் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

அதுபோல அபி நட்சத்திரா பல திரைப்படங்களில் தங்கை கேரக்டரில் நடித்து வருகிறார். இவர்கள் நடிக்கும் இந்த சீரியலுக்கு "உன்னை சரணடைந்து" என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது போல இந்த சீரியலை ஐ என் மூவி மேக்கர் தயாரிப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் புன்னகை பூவே என்ற சீரியலையும் தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications