ஆமா ரம்யா யாரு? ராணி எலிசபெத்தா? நரேஷ் பாபு ஒரு ஜென்டில்மேன்! அடுத்தவர் கணவரை பாராட்டும் பவித்ரா
சென்னை: நடிகர் நரேஷ் ஒரு ஜென்டில்மேன் என்றும் ரம்யா ரகுபதியை யார் என்றும் கேட்டு நடிகை பவித்ரா லோகேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
Recommended Video
தென்னிந்திய திரையுலகில் நடிகர், நடிகைகள் சிலர் அடுத்தவர் மனைவி, அடுத்தவர் கணவருடன் ரூம் போட்டு தங்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அண்மையில் தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவும் கன்னட நடிகை பவித்ரா லோகேஷும் மைசூருவில் தங்கி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
நரேஷ் பாபுவுக்கு 60 வயதானாலும் 4 ஆவதாக 45 வயது நடிகை பவித்ராவை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேஷுக்கு 3 மனைவிகள் உள்ள நிலையில் இருவரை விவாகரத்து செய்துவிட்டார், 3 ஆவது மனைவியை விவகாரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

நரேஷ் பவித்ரா
இந்த நிலையில் நரேஷும் பவித்ராவும் மைசூருவில் உள்ள ஹோட்டல் அறையில் சனிக்கிழமை தங்கியிருந்தனர். இதையறிந்த ரம்யா ரகுபதி அந்த ஹோட்டல் அறைக்கு சென்று அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டினார். ஆனாலும் நரேஷ் ரம்யாதான் என தெரிந்து கொண்டு கதவை திறக்கவேயில்லை.

கட்டிய மனைவி
இதையடுத்து விடிய விடிய அவர்கள் இருவரும் உள்ளே இருக்க, கட்டிய மனைவி வெளியே இருக்க ஒரே பரபரப்பாக இருந்தது. மறுநாள் போலீஸார் வந்து இந்த பிரச்சினையை முடித்துவிட்டனர். அவர்கள் வந்து கதவை தட்டியவுடன் நரேஷும் பவித்ராவும் வெளியே வந்தனர். அப்போது நரேஷ் சிரித்துக் கொண்டே வந்தார். இருவரையும் ரம்யா ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.

செருப்பால் அடிக்க பாய்ந்த் ரம்யா
செருப்பால் அடிக்க பாய்ந்தார் ஆனால் போலீஸார் அவரை தடுத்துவிட்டார்கள். இதனால் கோபமடைந்த பவித்ரா லோகேஷ் தனது வீட்டுக்கு சென்றவுடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ரம்யா யார் என்றே எனக்கு தெரியாது. அவர் என்ன ராணி எலிசபெத்தா, நடிகையா , இல்லை அரசியல்வாதியா?

ஜென்டில்மேன்
அவரை பற்றி பேசுவதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. நரேஷ் ஒரு பக்கா ஜென்டில்மேன். நான் ஒரு நடிகை என்பதால் என்னால் சாலையில் நடந்து செல்ல முடியாது. எனவே கார் கண்டிப்பாக வேண்டும். நானும் நரேஷும் நண்பர்கள்தான். எங்களுக்குள் ஒன்றும் இல்லை. இதனால் மற்றவர்களின் (ரம்யா) கருத்துகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

நான் வாங்கிய நகைகள்
மேலும் நான் அணிந்திருக்கும் நகைகள் எல்லாம் நரேஷ் வாங்கிக் கொடுத்ததாக சொல்கிறார்கள். இவையெல்லாம் என் சொந்த செலவில் பெங்களூரில் நான் வாங்கியது. எனக்கு யாரும் பரிசு கொடுக்கவில்லை. எந்த நகையையும் (வைர நெக்லஸ்) நான் யாரிடமும் வாங்கவில்லை என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications