விஜயகாந்த் சாரை பார்த்தாலே பயம்! பெல்ட்டால அடிச்சாங்க! அவமானப்படுத்தினாங்க! நடிகை பிரகதி
சென்னை: விஜயகாந்த் சாரை பார்த்தாலே எனக்கு பயம் என்றும், அவரை முதல் முறையாக ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த போது தான் சந்தித்த அனுபவத்தை நடிகை பிரகதி பகிர்ந்து கொண்டார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம். பிரகதியின் முதல் படம் வீட்ல விசேஷங்க!
இதுகுறித்து கலாட்டா சேனலுக்கு நடிகை பிரகதி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வீட்ல விசேஷங்க படத்தில் கிளாமர் கேரக்டர்தான். ஆனால் அந்த படத்திற்கு அது தேவைப்பட்டது. அதனால் நடித்தேன். வேறு ஒரு படத்தில் ஒரு காஸ்டியூம் கொடுத்தார்கள்.

அதை போட்டு நடித்தேன். அடுத்த நாள் வேறு ஒரு புடவை கொடுத்தார்கள். அந்த புடவை எனக்கு அசவுகரியத்தை கொடுத்தது. இதனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இந்த கேரக்டர், அந்த கேரக்டர் என வைத்துக் கொள்ள மாட்டேன்.
பிடிக்கவில்லை
எனக்கு பிடிக்கவில்லை என்றால் நடிக்க மாட்டேன் என சொல்லிவிடுவேன். ஒரு படத்தில் நடித்த போது யாரோ செய்த தவறுக்கு தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குநர் ஆகிய மூன்று பேருமே என்னை திட்டினார்கள். என் தந்தை எதிரில் என்னை மரியாதை குறைவாக நடத்தினார்கள்.
அசிங்கம்
திட்டினாலும் பரவாயில்லை, என்னை அவமானப்படுத்தினாங்க. எல்லார் முன்பும் என்னை அசிங்கமா பேசினார்கள். அந்த டிரஸ்ஸை நான் போட மாட்டேன் என சொன்னதற்காகத்தான் திட்டினார்கள். என்னை இதுவரை யாரும் திட்டினதே இல்லை.
அம்மாவிடம் கெஞ்சுவேன்
என் அம்மாவை கூட நான்தான் திட்டுவேன். ஒரு முறை கோபம் வந்து அம்மாவிடம் பெல்ட்டால் உதை வாங்கினேன். உடனே காலை பிடித்து கொண்டு "அம்மா உட்ரும்மா" என கேட்டேன். ரயிலில் ஒரு ஷூட்டிங்கிற்காக பட யூனிட்டுடன் சென்றேன்.
ஒரே சப்தம்
அப்போது ரயிலில் ஒரே சப்தமாக இருந்தது. என்ன என பார்த்த போது விஜயகாந்த் சாரை காரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். எவ்ளோ கூட்டமாக இருந்தது. முதல் முறையாக நான் அவரை பார்த்தேன். விஜயகாந்தும் அதே ரயிலில் வேறு ஒரு கோச்சில் வந்தார். நான் வேறு ஒரு கோச்சில் வந்தேன்.
ஹீரோ
ஒரு ஹீரோ போனால் பொது இடத்தில் இப்படி கூட்டம் கூடும் என்பதை விஜயகாந்த் சாரை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இது எனது வாழ்நாள் அனுபவம். அவருடன் நடித்தபோது நான் அவரை பார்த்து பயந்தேன். நான் எப்போதும் சிரித்து கொண்டே இருப்பேன். அதை பார்த்து விஜயகாந்த் சார் தப்பா நினைத்துக் கொள்வாரோ என்ற பயம் இருந்தது.
200 -க்கும் மேற்பட்ட படங்கள்
எனக்கு சினிமா குறித்து எதுவுமே தெரியாது. எனக்கு நல்ல படங்கள் வந்த போதெல்லாம் அதை தக்க வைத்துக் கொள்ள எனக்கு தெரியவில்லை. தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நான் பெரிய ஆர்டிஸ்டாகி, 2 நந்தி விருதுகளை வாங்கிய போதுதான் சினிமா என்றால் என்னவென தெரிந்தது. இவ்வாறு பிரகதி தெரிவித்தார்.
என்னென்ன படங்கள்
பிரகதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர். பிரகதி ஒரு விளம்பர படத்தில் நடித்த போது அவரை வீட்ல விசேஷங்க படத்தில் நடிக்க பாக்யராஜ் அணுகினார். அதை தொடர்ந்து 7 தமிழ், ஒரு மலையாள படங்களில் நடித்துள்ளார்.
கடைசி படம்
பின்னர் அவருக்கு திருமணமானதும் 3 ஆண்டுகள் கழித்து டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சில நேரம் காமெடி படங்களிலும் நடிக்கிறார். தமிழில் பெரிய மருது படத்தில் விஜயகாந்துடன் நடித்துள்ளார். இவர் நடித்த கடைசி படம் பகீரா ஆகும். தாரை தப்பட்டை, சித்து, தைரியம், சிலம்பாட்டம், வணக்கம்டா மாப்ள, டோனி, ஜெயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications