கேஸ் வெடித்து விபத்து ஆகிடுச்சு! ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை எமோஷனல் வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கேரக்டரில் நடிகை ப்ரீத்தா ஷெட்டி நடித்து வருகிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு தெரிந்த நபருக்கு விபத்து நடந்துவிட்டது, அவருக்கு உதவுங்கள் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் ஸ்ருதி கேரக்டரில் நடித்து வரும் ப்ரீத்தா இன்று தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஹாய் மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த வீடியோ என்னுடைய தெரிஞ்சவங்க ஒருத்தருக்காக தான் நான் பண்ணுறேன். எனக்கு தெரிஞ்ச நபரின் பெயர் கார்த்திக் அவரு வீட்டில் ரிசென்டா கேஸ் லீக் ஆகி பெரிய ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. அதனால அவருக்கு சீவியரா இஞ்சூரி ஆகி இருக்கு. அவரை வேலூர் சிஎம்சி ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்காங்க.
அங்க அவருடைய ட்ரீட்மென்ட்க்கு அஞ்சு லட்சம் ஆகும் என்று சொல்லி இருக்காங்க. ஆனா அவங்க வீட்டில் அவங்க தான் சம்பாதிக்கிற ஒரே நபர். அவங்க அப்பாவுக்கு அஞ்சு வருஷமா எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் தான் இருக்கிறார். அவரையும் கார்த்திக் தான் பாத்துட்டு இருந்தாரு. இப்போ கார்த்திக்குக்கு இப்படி ஆகிவிட்டதால் பினான்சியலா சப்போர்ட் பண்றதுக்கு அவங்க வீட்டில் யாருமே இல்ல.
அவங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் நான் இந்த வீடியோ போட்டு இருக்கேன். உங்களால முடிஞ்ச அமௌன்ட் அந்த நபருக்கு அனுப்புனா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் என்று எமோஷனலாக அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரீத்தா ஆரம்பத்தில் மாடலின் மூலமாகத்தான் சீரியலில் நடிக்க தொடங்கினார். கல்லூரி படிக்கும்போது ஆடிஷனில் பங்கு பெற்ற பிரித்தாவிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் தான் அவர் இனி சீரியலே வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க வேண்டும் என்றாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று சிலர் சொன்னதால் எனக்கு அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் இந்த துறையில் ஜெயிக்க வேண்டும் என்று இல்லை என்று விலகி இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு ஒரு சில சீரியல்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதிலும் சன் டிவியில் இனியா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கேரக்டர் நடிக்க வந்திருக்கிறது. ஸ்ருதி கேரக்டருக்காக உடல் எடையை குறைத்து நடிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அது மக்கள் மத்தியில் இந்த அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுக்கும் என்று அவரே எதிர்பார்க்கவில்லை என்று பல பேட்டிகளில் ப்ரீத்தா பேசியிருக்கிறார்.
ஸ்ருதி கேரக்டர் தன்னுடைய மனதில் தோன்றும் விஷயத்தை அப்படியே பேசி விடுபவர். அது போல தான் நிஜ வாழ்க்கையிலும் பிரீத்தா இருப்பாராம். அதுபோல ஸ்ருதி எப்போதும் தன்னை பற்றி மட்டும் யோசிப்பார். ஆனால் பிரீத்தா தன்னுடைய குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர் நான் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் பிரீத்தா வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிக கமெண்ட்களை பெற்று வருகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications