சன் டிவியின் டாப் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. இனி விஜய் டிவி நடிகை.. காரணம் இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ப்ரீத்தி சர்மா அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் கதாநாயகியாக நடித்த நடிகை அறிமுகமாக இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது புதியது அல்ல. ஒரு சீரியல்கள் தொடங்கப்படும் போது அதில் இருக்கும் நடிகர்கள் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக அந்த சீரியலில் பயணிக்க முடியாமல் விலகி விடுகிறார்கள். ஆனால் சீரியலில் கதாநாயகன் அல்லது கதாநாயகி விலகி விட்டால் அது மக்கள் மத்தியில் அதிகமாக அதிருப்தியை ஏற்படுத்தி விடும்.

குறிப்பிட்ட கேரக்டரில் இனி இவர்கள்தான் என்று மக்கள் அந்த கேரக்டரோடு நடிகர்களை தொடர்புபடுத்தி மனதில் பதிய வைத்திருந்த பிறகு திடீரென்று அவர் விலகுவதால் அந்த சீரியலுக்கு டிஆர்பி சரிவு ஏற்படுகிறது. ஆனாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலில் இருந்து விலகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த மாதிரிதான் மலர் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு கதாநாயகன் திடீரென்று விலகி இருந்தார்.
அதை தொடர்ந்து இப்போது அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ப்ரீத்தி சர்மாவும் விலகி இருக்கிறார். ஏற்கனவே ப்ரீத்தி சர்மா "திருமணம்" என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தான் அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த சீரியல் மூலமாக அவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார்.

நடிகை ராதிகா நடித்து இயக்கிய சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்த ப்ரீத்திக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அது போல இணையத்திலும் இவருக்கு அதிகமான இளம் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் இவருக்கு மலர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலும் நல்ல வரவேற்பு பெற்றது.
ஆனால் திடீரென்று சீரியலின் கதாநாயகன் விலகி இருந்தார். அது போல சீரியலின் டைமும் மாற்றி இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ப்ரீத்தி சர்மாவும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த மோதலும் காதலும் சீரியலில் கதாநாயகி ஆக நடித்த நடிகை அஸ்வதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் இருந்து பிரீத்தி சர்மா விலகியதற்கு அவர் வெள்ளித் திரையில் வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதால் சின்ன திரையில் இருந்து விலகியதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் இனி மலர் சீரியலில் கதாநாயகி கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் வர இருக்கிறது அது தனக்கு செட்டாகாது என்று நினைத்து பிரீத்தி சீரியலில் இருந்து விலகி விட்டாரா என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் எது உண்மை என்பது பிரீத்தி இதுவரைக்கும் விளக்கம் கொடுக்கவில்லை. இதனால் அவர் விரைவில் இதற்கு விளக்கம் கொடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரீத்தியின் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
இனி அஸ்வதியின் நடிப்பு மலர் சீரியலில் என்ன மாதிரி இருக்க போகிறது சீரியலை எப்படி கொண்டு போகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கனவே மோதலும் காதலும் சீரியலில் வேதாவாக அதிகமான ரசிகர்களை கவர்ந்த அஸ்வதி இனி மலராக மக்கள் மனதில் வாசம் வீசுவரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications