சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை செய்த செயல்.. இப்படி ஒரு பிசினஸா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை பிரியங்கா நல்கரி தான் நடிப்பு வந்த நளதமயந்தி என்ற சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு சேர்ந்து தான் புதியதாக தொடங்கி இருக்கும் பிசினஸ் குறித்த புகைப்படத்தை பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார்.
ரோஜா சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா நல்கரிக்கு முதல் சீரியலிலே அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அதற்குப் பிறகு அந்த சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த நேரத்தில் பிரியங்காவிற்கு திருமணம் முடிந்தது. ராகுல் என்பவரை பிரியங்கா சில வருடங்களாகவே காதலித்து வந்து நிலையில் அவரை திருமணம் செய்திருந்தார்.

ஏற்கனவே ராகுலோடு பிரியங்காவிற்க்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்த பிறகு ராகுலும் பிரியங்காவும் பிரிந்து இருந்ததாக பிரியங்கா பேட்டிகளில் பேசியிருந்தார். ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் சேர்ந்திருந்தனர். இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு பிறகு சீதாராமன் சீரியலில் பிரியங்கா நடித்து வந்தார்.
ஆனால் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து ஜீ தமிழில் நள தமயந்தி என்ற சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இது குறித்து அப்போது அவர் பேசுகையில் என்னுடைய கணவர் தான் எனக்கு மீண்டும் நடிக்க சம்மதம் சொன்னார். நான் நடிப்பை விட்டு விலகி வீட்டில் இருந்த போது நான் பட்ட கஷ்டத்தை என்னுடைய கணவர் பார்த்து தான் உன்னால் நடிக்காமல் இருக்க முடியாது நீ போய் நடி என்று சொல்லி அனுப்பி வைத்தார் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் நள தமயந்தி சீரியலில் பிரியங்கா நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் டெலிட் செய்திருந்தார். இதனால் இவர்கள் மீண்டும் பிரிந்து விட்டார்களா? என்ற கேள்விகள் அதிகமாக எழும்பி வந்தது. இந்த நிலையில் பிரியங்கா தன்னுடைய கணவரோடு சேர்ந்து தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் நள தமயந்தி சீரியலில் பிரியங்கா இறந்து போவது போன்று காட்சிகள் வைத்திருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டாரா? அதனால் தான் இப்படி காட்சிகள் வைத்திருக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான நிலையில் இதற்கு பிரியங்கா விளக்கம் கொடுத்து ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தனர்.
அதில் நானாக சீரியலில் இருந்து விலகவில்லை விரைவில் மீண்டும் வருவேன் என்கிற மாதிரி தான் அவர் பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு பிரியங்கா ஹோட்டல் பிசினஸ் தொடங்கி இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications