ஷூட்டிங்கில் "மழை"யில் நனைந்து.. 2 அடி எடுத்து வைத்ததும் தவறி விழுந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி
சென்னை: "இது சொல்ல மறந்த கதை" சீரியலில் ஷூட்டிங்கின் போது சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி வழுக்கி விழுந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார். அந்த கேரக்டர் மூலம் அவர் மேலும் புகழடைந்தார். இதையடுத்து அவர் விஜய் டிவியில் மற்றொரு தொடரும் நடித்திருந்தார்.
அந்த சீரியலின் பெயர் நாம் இருவர் நமக்கு இருவர். சில காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த தொடரில் அவர் வந்த காட்சிகள் குறைக்கப்பட்டதே காரணம் என சொல்லப்பட்டது.

கலர்ஸ் தமிழ் தொலைகாட்சி
இதையடுத்து கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார். அதில் விதவை பெண் வேடத்தில் நடித்து வருகிறார். இரு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படும் ஒரு பெண் கேரக்டரில் நடித்து வருகிறார். இது தொடர்பான ஷூட்டிங்கில் இவர் வழுக்கி விழுந்த வீடியோவை ரச்சிதாவே பகிர்ந்துள்ளார்.

குழந்தைகள்
மழையில் குழந்தைகள் உடன் கஷ்டப்படுவது போல் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அதில் ஒரு டியூப் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து கொண்டிருந்தனர். மின்னலுக்காக லைட்டிங் எல்லாம் அடிக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது ரச்சிதா குடையை எடுத்துக் கொண்டு மழையில் எங்கோ செல்வது போன்று காட்சி படமாக்கப்பட்டது.

ரச்சிதா
அப்போது ரச்சிதா தடுக்கி கீழே விழுந்துவிட்டார். உடனே பதறிய இரு குழந்தைகளும் ரச்சிதாவை தூக்குவதற்கு வருகிறார்கள். அவரும் ஒன்றுமில்லை, நீங்கள் இந்த "மழையில்" நனைய கூடாது உள்ளே போங்க என்கிறார். உடனே சீரியல் தயாரிப்பு நிர்வாகமும் ஓடி வந்து ரச்சிதாவுக்கு என்னாச்சுனு கேட்கிறார்கள். இப்படியாக இந்த ஷூட்டிங் வீடியோ முடிகிறது.

கணவருடன் பிரிந்த ரச்சிதா
ரச்சிதா மகாலட்சுமிக்கும் பிரபல சீரியல் நடிகர் தினேஷுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அண்மையில் ரச்சிதா பேட்டி அளித்த போது இது சொல்ல மறந்த கதை சீரியலில் வரும் கதாபாத்திரத்துடன் எனது வாழ்க்கையும் சிறிது ஒத்துபோவதாக தெரிவித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications